ரூ.3,499 விலையில் மோட்டோரோலா பல்ஸ் எஸ்கேப் ஆன்-இயர் ப்ளூடூத் ஹெட்போன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 40mm ஜோடி ஓவர்சைஸ் டிரைவர் கொண்டதாக  பல்ஸ் எஸ்கேப் கிடைக்கின்றது.

மோட்டோரோலா பல்ஸ் எஸ்கேப் ப்ளூடூத்

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கின்ற இந்த ஹெட்போன் 40mm ஜோடி ஓவர்சைஸ் டிரைவர்கள் கொண்டதாக வந்துள்ள இதில் மிக உயர்தரமான இசையை அனுபவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரைச்சலை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் பிளே டைம்  பேட்டரி தாங்கும் திறன் கொண்டதாக உள்ளது. மேலும் அரை மணிநேரம் சார்ஜ் செய்தால் 2 மணிநேரம் வகை ப்ளே டைம் பெறலாம் என மோட்டோரோலா தெரிவிக்கின்றது. இந்த ஆன்-இயர் ஹெட்போன் வாயிலாக ஒரே சமயத்தில் இரண்டு ஸ்மார்ட்போன்களை இணைக்கும் வகையிலும், ஆப்பிள்,ஆண்ட்ராய்டு இயங்குதள ஸ்மார்ட்போன்கள், குரல் வழி கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் ஆப்பிள் சிரி ஆகியவற்றின் ஆதரவுடன் A2DP, HF, மற்றும் AVRCP ஆதரவினை கொண்டுள்ளது.

ப்ளூடூத் 4.2 மற்றும் 3.5mm ஹெட்போன் வாயிலாக இணைக்கவும்,அதிகபட்சமாக 60 அடி வரை ப்ளூடூத் ஆதரவினை பெறலாம் மற்றும் அழைப்புகளை ஏற்க மைக்ரோபோன் வசதி வழங்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.