Google Play Store

Google Play Store: ஆட்வேர் மறைமுகமாக திணிக்கும் 200க்கும் மேற்பட்ட செயலிகளை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான மேம்பாட்டினை வழங்கி வரும் செக்பாயின்ட் அட்வேர்களை மறைமுகமாக செலுத்தும் செயலிகளை கண்டறிந்து கூகுளுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த செயலிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

200க்கு அதிகமான கேம் சார்ந்த செயலிகள் தற்போது வரை பிளே ஸ்டோரில் 150 மில்லியனுக்கு அதிகமான தரவிறக்கங்களை கண்டுள்ளது. இவற்றில் குறிப்பாக Snow Heavy Excavator Simulator என்ற கேம அதிகபட்ச டவுன்லோடுகளை பெற்றுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் 210 செயலிகள் நீக்கம்

malware

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயனாளர்களுக்கான பிளே ஸ்டோரில் வழங்கப்பட்டு வரும் செயலிகளில் சுமார் 7 லட்சம் ஆபுகளை நீக்கியிருந்தது. தற்போது தொடர்ந்து பல கட்டங்களாக செயலிகளை பாதுகாப்பு சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிக்கை மற்றும் பிளே ப்ராடெக்ட் மூலம் கண்டறிந்து நீக்கி வருகின்றது.

அந்த வகையில் செக்பாயின்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு தொடர்பான அறிக்கையில் ஆட்வேர் சார்ந்த தீங்கிழைக்கும் மென்பொருள்களை பின்புலத்தில் கொண்ட 200க்கு மேற்பட்ட கேமிங் சார்ந்த செயலிகளை கண்டறிந்துள்ளது. இவற்றை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

சின்பேட், எனப்படும் இந்த தீம்பொருள் ஒரு விளம்பரம் வழங்கும் தளமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 210 செயலிகள் பாதிப்படைந்துள்ளது. ஆனால்  செயலியை உருவாக்கியவர்கள் அறியாமலே கூட இந்த மால்வேரை புகுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலேட்டமாக பார்த்தால் கூகுளின் பிளே பராடக்ட் மூலம் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், கூகுள் ஸ்கேனிங் மூலம் சிக்கிக் கொள்ளாத வகையில் வடிவமைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நீங்கள் கீழே வழங்கப்பட்டுள்ள படத்தில் இந்த செயலிகளின் விபரத்தை அறிந்துகொள்ளலாம். உங்களுடைய ஸ்மார்ட்போனில் இந்த செயலிகளை உடனடியாக நீக்கி விடுங்கள்..

Google removes 200 games from Play Store

முழுமையான பட்டியலை காண இதனை பார்வையிடுங்கள்.. https://www.documentcloud.org/documents/5766854-SimBad-AppList-Package.html