இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், AnyDesk என்கின்ற செயலி தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடுவதாக ஆர்பிஐ சார்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த செயலியை பயன்படுவதனை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி , சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனி டெஸ்க் (AnyDesk) எனப்படுகின்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் கிடைக்கின்றது. இந்த செயலியை தரவிறக்கி பயன்படுத்தும் பயனாளர்களின் மொபைலில் உள்ள டிஜிட்டல் வாலட், வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை UPI முறையில் முறைகேடாக திருடிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.

AnyDesk செயலி வாயிலாக 9 இலக்க கோடு மூலம் அதன் பயனாளர்கள் விபரங்களை இலகுவாக மற்ற மொபைலில் ரிமோட் செய்து அந்த மொபைலில் உள்ள அனைத்து தகவல்களையும் பயன்படுத்த இயலும், அதாவது டீம் வீயூவர் போன்ற செயலி முறையில் செயல்படுகிறது.

எனவே, இந்த செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் உடனடியாக AnyDesk செயலியை நீக்கும்படி எச்சரிக்கையை ஆர்பிஐ விடுத்துள்ளது.

RBI Notice கீழே இணைக்கப்பட்டுள்ளது.