கூகுள் பிளே ஸ்டோரில் 'Remove China Apps' செயலியை நீக்கிய பின்னணி தெரியுமா ?

மிகவும் குறுகிய காலத்தில் இந்தியளவில் பிரபலமாக பேசப்பட்ட ஆப்ஸ்களில் ‘Remove China Apps’ என்ற செயலி முன்னிலை வகித்த நிலையில், இதனை பிளே ஸ்டோர் தளத்திலிருத்து கூகுள் இன்றைக்கு நீக்கியுள்ளது.

முன்பாக டிக்டொக் செயிலிக்கு மாற்றாக அடையாளம் கானப்பட்ட மிட்ரான் செயலியின் நிரல் டிக்டொக் போலவே அமைந்திருப்பதுடன் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.  சீனாவின் வுஹானில் தோன்றிய கோவிட்-19 பெருந்தொற்றுநோய் மற்றும் இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை போன்ற காரணங்களால் இந்தியர்கள் சீனாவின் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சீன செயலிகளை நீக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஜெய்ப்பூர் ஒன் டச் ஆப் லேப்ஸ் என்ற ஸ்டார்ட் அப்பின் வணிக நோக்கமற்ற ரிமூவ் சீனா ஆப்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்ட இரு வாரங்களுக்குள் 50 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கடந்து, 4.9 நட்சத்திர ரேட்டிங்ஙை பெற்றிருந்தது.

மே 17 அன்று வெளியிடப்பட்ட ‘Remove China Apps’ செயலியானது, டிக்டொக், UC உலாவி உட்பட பல்வேறு சீன நாட்டை தலைமையிடமாக கொண்ட செயலிகளை கண்டறிந்து நீக்குகின்றது.

Remove China Apps செயலியை கூகுள் நீக்கியுள்ள நிலையில் இதற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளது. அதாவது எந்தவொரு மூன்றாம் தர ஆப் அல்லது செயலியை அன் இன்ஸ்டால் செய்வதற்கு ஊக்குவிக்கக் கூடாது என்ற கூகுளின் விதிகளுக்கு உட்பட்டு இந்த செயலியை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.