மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சவூதி அரேபியாவில் பிறந்துள்ள சாரா ஆப் (sarahah app) வைரலாக இந்தியளவில் டிரென்டிங்கில் உள்ள நிலையில் சாரா என்றால் நேர்மை என்ற பொருளுடன் தொடங்குகின்ற இந்த செயலியை பற்றி அறிந்து கொள்ளலாம்.

சாரா ஆப்

டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ள சாரா எனும் நேர்மையான செயலில் உள்ள சிறப்பம்சங்களை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

https://www.sarahah.com எனும் இணையதள பக்கத்தை டெஸ்க்டாப் பயனாளர்களும், ஸ்மார்ட்போன் பிரியர்கள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் sarahah என டைப் செய்து தேடி தரவிறக்கி கொள்ளுங்கள்.

சாரா ஆப் நோக்கம் என்ன ?

நீங்கள் யார் என எந்த இடத்திலும் குறிப்பிடாமல் உங்கள் நண்பருக்கு தெரிவிக்க வேண்டியதை மிக இலகுவாக தெரிவிக்க உதவும் வகையிலும், உங்கள் நண்பர் உங்களை பற்றி நினைக்கும் கருத்தை மறைமுகமாக தெரிவிக்க உதவும் நோக்கத்திலே இந்த செயலி சாரா வழங்கப்பட்டுள்ளது.

குறையில்லாத ஒரு செயலியா ?

இணையத்தின் நேர்மையான முகத்தை மட்டுமல்ல மறைமுகமான ஆபாசத்தை உமிழ்வதனை கட்டுப்படுத்துவது, இதிலும் மிக கடினமான அம்சமாகவே அமைந்திருக்கின்றது என்பதே உண்மை.

புகாரளிக்கும் வசதிகள் வழங்கப்படும், மறைமுக நண்பருக்கு ரிப்ளை போன்றவை எதிர்காலத்தில் இணைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தாலும், நல்ல செயல்களுக்கு பயன்படுத்தி நல்லதொரு செயலியாக தொடர பயனர்கள் கையில் தான் சாரா எனும் நேர்மை ஆப் எதிர்காலம் உள்ளது.