இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்யும் ஆப்-களின் எண்ணிக்கை 5 முதல் 207 வரை இருக்கும் என்றும், இது சராசரியாக 51 என்ற அளவில் உள்ளதாக இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

இருந்தபோதும், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் தங்கள் இன்ஸ்டால் செய்யும் ஆப்-கள் அனைத்தையும் பயன்படுத்துவது இல்லை என்றும். பெரும்பாலான ஆப்-கள் தோராயமாக 24 ஆப்-கள் பயன்படுத்தப்படாமலே உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு நடத்திய டெக்ஆர்க் என்ற டெக்னாலஜி ரிசார்ச் நிறுவனம் நடத்திய ஆய்வில், சில ஸ்மார்ட்போன் பயனாளர்கள், தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப் குறித்து எந்த ஐடியாவும் இல்லாமல் உள்ளனர்.

இந்த ஆப்-கள் ஸ்மார்ட்போன் பேட்டரிகளை விரைவாக காலி செய்யும் வகையில் உள்ளவையாகும். சமூக இணையதள ஆப்-களை பயனாளர்கள் நாள்தோறும் 76 சதவிகிதம் பயன்படுத்துகின்றனர். மொபைல் கேம்ஸ்கள் 70 சதவிகிதம் பயன்படுத்துப்படுகிறது.

ஸ்மார்ட்போன் பயனாளர்களில், பொருளாதார ஆப்-கள் பயன்படுத்தி வருகின்றனர். வால்ட் ஆப்-கள் டிஜிட்டல் முறையில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.