Tik Tok : பிரசத்தி பெற்ற சமூக வலைதளமான டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

டிக் டாக் செயலி இலகுவான முறையில் பயனாளர்கள் தங்கள் டப்ஸ்மாஸ் வீடியோ, சினிமா பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு நடித்து பதிவேற்றி வருகின்றனர். இந்த செயலில் நல்ல விசயங்களை விட ஆபாசம் சார்ந்த தகவல்கள் மற்றும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்ற நிலையில் டிக் டாக் மீதான எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்த செயலி மூலம் தமிழக கலாச்சாரம் சீரழிந்து சட்டஒழுங்கு பிரச்சனைகளுக்கும் காரணமாக உள்ளதை குறித்து,  பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது பேசிய எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி கேள்விக்கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப்ளூ வேல் விளையாட்டை எப்படி மத்திய அரசு மூலம் தடை செய்யப்பட்டதோ, அதேபோல டிக் டாக் செயலிக்கும் தடை செய்யப்படும். அதற்காக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும் என கூறியுள்ளார். எனவே, டிக் டாக் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளன்ர்.