அமெரிக்காவில் 40 கோடி ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ள சீனாவின் டிக்டாக் செயலி டவுன்லோட் எண்ணிக்கை 1 பில்லியன் இலக்கை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கண்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

100 கோடி நபர்களால் டவுண்லோட் செய்யப்பட்டுள்ள டிக்டாக் செயலி மூலம் பாடலையோ அல்லது வசனத்தையோபின்னணியில் இயக்கி அதற்கு ஏற்றாற்போல் நடனமாடுவது, வசனம் பேசுவது, நடித்து காட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்றது. இந்த செயலி சீன நாட்டின் பைடான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

டிக்டாக் செயிலிக்கு அபராதம்

அமெரிக்காவில் செயல்படுகின்ற டிக்டாக் அங்கு பயன்படுத்துகின்ற குழுந்தைகளின் ரகசிய தவல்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியின்றி பெற்றதாக டிக்டாக் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, விதிகளை மீறி குழந்தைகளின் தகவல்களை திரட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் தலைமை
வர்த்தக ஆணையம் டிக்டாக் செயலிக்கு $ 5.7மில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய் அபராதமாக விதித்துள்ளது.

அபராதத்தின் எதிரொலியாக டிக்டாக் செயலி 13 வயதுக்குட்பட்டவர்களுக்காக பெற்றோர்களால் கட்டுப்படுத்தும் புதிய வசதியை இணைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

டிக்டாக் சாதனை தெரியுமா..!

இந்தியாவில் சுமார் 25 கோடி மக்களால் டிக்டாக் செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படுகின்ற இந்த செயலியை சீனாவை தவிரத்து சுமார் 71.3 மில்லியன் மக்கள் தரவிறக்கி உள்ளதாகவும், ஆக மொத்தமாக சீனாவையும் சேர்த்து 100 கோடி நபர்களால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாக சென்சார் டவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் மட்டும் 25 கோடி மக்களை பெற்றுள்ள இந்த செயலியின் மொத்த சர்வதேச பங்களிப்பில் இந்தியாவின் பங்கு மட்டும் 25 சதவீதமாக உள்ளது. மேலும் முந்தைய ஜனவரி 2018-யை விட இந்த வருடம் ஜனவரி 2019-ல் மட்டும் 43 சதவீத புதிய பயனாளர்களால் இந்த செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் அபரிதான வளர்ச்சியை பெற்றுள்ளது.

டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ள நிலையில், தமிழெ சட்டமன்றத்திலும் இது தொடர்பான விவாதங்கள் நடந்தது குறிப்பிடதக்கதாகும்.