இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனம் வோடபோன் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலான வோடபோன் ரோடுசேஃப் என்ற பெயரில் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் ரோடுசேஃப்

  • ஆண்ட்ராய்டு பயணர்களுக்கு முதற்கட்டமாக வோடபோன் ரோடுசேஃப்  வழங்கப்பட்டுள்ளது.
  • வோடபோன் மற்றும் சேவ்லைஃப் அறக்கட்டளை இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளது.
  • கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கி கொள்ளலாம்.

இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனம் வோடபோன் மற்றும் சேவ்லைஃப் அறக்கட்டளை ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொழுது அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை உள்பட மொபைல் சார்ந்த தொல்லைகளில் இருந்து விடுபடும் வகையிலான நோக்கத்துக்காக இந்த ரோடுசேஃப் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒருமுறை செயலியை நிறுவி அதன் முழுமையான செடிங்கஸ் அனைத்தையும் நிறைவு செய்யும் பொழுது இந்த செயலியை பயன்படுத்துவதனால் வாகனத்தின் 10 கிமீ வேகத்தை அதிகரிக்கும் பொழுது தானாகவே அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உள்பட அறவிப்பு சேவைகளை நிறுத்திவிடும். மேலும் இதில் அமைந்துள்ள ஆட்டோமேட்டிக் கிராஸ் டிடெக்டர் எனும் வசதி போனில் உள்ள ஆசிலோரோமீட்டர் வாயிலாக திடீரென தடுமாறினோலோ அல்லது விபத்தில் சிக்கனாலோ அவசரகால உதவியை பெறும் வகையில் அமைந்திருக்கின்றது.

வோடபோன் ரோடுசேஃப் செயலில் சாலை விதிகள் , விதிகளை மீறினால் வசூலிக்கப்படுகின்ற அபராதம் போன்ற விபரங்களும் வழங்கப்பட்டுள்ளது. செயிலியை அறிமுகம் செய்துள்ள நிலையில் கூடுதலாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 96 சதவித நபர்கள் மொபைல் பேசிக்கொண்டு வாகன ஓட்டினால் பாதுகாப்பு இல்லை என உணருகின்றனராம். மேலும் 34 சதவித நபர்கள் மொபைல் பயன்படுத்திக் கொண்டு வாகனம் இயக்கினால் திடீரென பிரேக் பிடிக்கின்றனராம், இதுதவிர 20 சதவித பேர் மொபைல் பயன்படுத்தி ஆபத்தான சூழலுக்கு தள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டும்பொழுது மொபைல் தவிர்த்திடுங்கள்…!