வந்துவிட்டது டார்க் மோட்.., இப்போது வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு

மிக நீண்ட எதிர்பார்பார்ப்புகளுக்குப் பிறகு சர்வதேச அளவில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோருக்கு டார்க் மோட் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கு வந்துள்ளது.

எவ்வாறு டார்க் மோடினை செயற்படுத்துவது ?

ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐ.ஒ.எஸ். 13  இயங்குதளத்தினை பயன்படுத்துவோர் புதிய டார்க் மோட் அம்சத்தினை தங்கள் மொபைலின் சிஸ்டம் செட்டிங்களில் செயல்படுத்திக் கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு முந்தைய ஓ.எஸ் பயன்படுத்துவோர் வாட்ஸ்அப் Settings — Chats — Theme — Dark என்ற ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும்.

இந்த டார்க் மோடினை வாட்ஸ்ஆப் நிறுவனம், “Hello Darkness” என்ற பெயரில் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளது. டார்க் மோடினை பொறுத்தவரை கண்களை பாதிக்காத வகையில் டார்க் கிரே நிறத்துடன் வெள்ளை நிறத்தைப் பெற்றுள்ளது.

இதனை பெற உங்களுடைய வாட்ஆப் செயலியை மேம்படுத்துங்கள்.