whatsapp news in tamil

ஹேக்க்ர்களால் வாட்ஸ்ஆப் செயலியை இலகுவாக உளவு பார்க்க வழி வகை செய்யும் குறைபாட்டினை கொண்டதாக உள்ளதால் விரைவில் புதிய அப்டேட் மேற்கொள்ள வேண்டும் என வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது.

இந்தத் இணைய தாக்குதலை இஸ்ரேலிய பாதுாப்பு நிறுவனம் NSO Group உருவாக்கியதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் அப்டேட்

உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்ஆப் குறிப்பாக இந்தியாவில் கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயல்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கால் மூலம் வாட்ஸ்ஆப்பில் ஊடுருவும் அபாயம் உள்ளதாகவும், குறிப்பிட்ட எண்ணுக்கு அழைக்கும் ஹேக்கர்கள் அழைப்பு மூலமாகவே கண்காணிக்கும் மென்பொருளை மொபைலில் இன்ஸ்டால் செய்கிறார்கள். இதன் காரணமாக ஹேக்கர்கள் இலகுவாக கண்கானிக்கின்றனர் என வாட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது.

எனவே, உடனடியாக தனது அனைத்து பயனாளர்களையும் வாட்ஸ்ஆப் செயலியை மேம்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்ட்

•Google Play store -ல் நுழையவும்

•திரையில் மேலே இடது புறம் மெனுவில் அழுத்தவும்

•My Apps & Games அழுத்தவும்

•அண்மையில் வாட்ஸப் அப்டேட் செய்யப் பட்டிருந்தால் Open என்ற பொத்தானுடன் கூடிய app களின் பட்டியலில் அது இருக்கும்.

•தானாகவே வாட்ஸாப் அப்டேட் செய்யப்படாதிருந்தால், Update என்று காட்டும். புதிய வெர்சனை நிர்மாணம் செய்வதற்கு Update பொத்தானை அழுத்தவும்

•ஆண்ட்ராய்ட் செல்போனுக்கான வாட்ஸப் புதிய வெர்சன் 2.19.134

iOS

•App Store -ல் நுழையவும்

•திரையின் கீழே Updates – ஐ அழுத்தவும்

•வாட்ஸாப் அண்மையில் அப்டேட் செய்யப்பட்டிருந்தால், Open என குறிப்பிடும் பொத்தான்களின் app -கள் பட்டியலில் அது இடம் பெற்றிருக்கும்.

•தானாகவே வாட்ஸாப் அப்டேட் செய்யப்படாதிருந்தால், Update என்று காட்டும். புதிய வெர்சனை நிர்மாணம் செய்வதற்கு Update பொத்தானை அழுத்தவும்.

•iOS – க்கான வாட்ஸாப் புதிய வெர்சன் 2.19.51

மேலும் இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ள பிபிசி தமிழ் இணையதள முகவரியில் காணலாம்.