whatsapp news in tamil

WhatsApp Temporarily banned: உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற சமூக வலைதளமான வாட்ஸ்ஆப் நிறுவனம் போலியான செயலிகள் மூலம் வாட்ஸ்ஆப்பினை கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தவதனை தவிர்க்கும் நோக்கில் பயனாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன் விபரம் பின் வருமாறு ;-

“தற்காலிகமாக தடைசெய்யப்படுகிறீர்கள்“ (Temporarily banned) என்ற மெசஞ் உங்களுக்கு வரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்ஆப் தங்களது பயனாளர்களுக்கு பெரிய அளவில் கஸ்டமைஸ் வசதிகளை வழங்குவதில்லை. இதனால் பெரும்பாலான வாட்ஸ்ஆப் கஸ்டமைஸ் வசதிகளை வழங்கும் போலி ஆப்கள் , GBWhatsApp மற்றும் WhatsApp Plus போன்றவற்றை பயன்படுத்தினால் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. வாட்ஸ்ஆப் தடை விதிக்கப்பட்டால் நீக்குவது எப்படி ? என்பதனை அறிந்துகொள்ளலாம்.

ஆதரவற்ற இது போன்ற செயலிகளின் வெர்ஷனை நீங்கள் பயன்படுத்தினால் நிச்சியமாக வாட்ஸ்ஆப்பை இனி நீங்கள் பயன்படுத்த முடியாத வகையில் தடை விதிக்கவும் , உங்கள் சாட் வரலாறு மற்றும் படங்களை டெலிட் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்

எவ்வாறு இந்த செயலிகளை நீக்க வேண்டும் என்பதற்கான உதவி பக்கத்தை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது. 

தற்காலிகமாக தடை விதிக்கப்படால் தடை காலம் வரை உங்களால் வாட்ஸ்ஆப்பை அனுக இயலாது.  ஆனால் நிரந்தரமாக தடை விதிக்கும் பட்சத்தில் நீங்கள் அவர்களை மின்னஞ்சல் மூலம் மட்டும் தொடர்பு கொள்ள இயலும்.

 

தடை செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் திரும்ப பெறுவது எப்படி ?

தடை காலம் நிறைவடைந்த பின்னர்.,

நீங்கள் GBWhatsApp பயன்படுத்தினால் இந்த வழிமுறையை பின்பற்றுங்கள்.. உங்கள் வாட்ஸாப் உள்நுழைந்த பிறகு..

GB WhatsApp, –> More options > Chats > Back up chats.

சாட்டினை பேக்கப் செய்த பின்னர் உங்கள் போனின் Phone Settings > tap Storage > Files பகுதிக்கு செல்லுங்கள்.

இங்கே GB WhatsApp என பெயரிடப்பட்ட ஃபைல் இருக்கும் இதனை க்ளிக் செய்து More > Rename என பெயரை “WhatsApp” என மாற்றுங்கள்.

உங்களுடைய போனில் உள்ள வாட்ஸ்ஆப்பை அன் இன்ஸ்டால் செய்த பின்னர், மீண்டும் புதிதாக வாட்ஸ்ஆப்பை பிளே ஸ்டோர் டவுன்லோட் செய்து , உங்கள் மொபைல் நம்பரை பயன்படுத்தி புதிதாக தொடங்கலாம்.

இப்போது நீங்கள் உங்கள் பழைய சாட் தரவுகளை பெற  Backup பகுதியில் tap Restore > Next என கொடுத்தால் போதுமானதாகும்.

நீங்கள் WhatsApp Plus பயன்படுத்தி இருந்தால், உங்கள் அரட்டை வரலாறு விபரங்கள், சேமித்த பின்னர் (Backup) அது தானாகவே உத்தியோகபூர்வ WhatsApp பயன்பாட்டுக்கு மாறிக்கொள்ளும்.  பிறகு வழக்கம்போல உங்களுடைய போனில் உள்ள வாட்ஸ்ஆப்பை அன் இன்ஸ்டால் செய்த பின்னர், மீண்டும் புதிதாக வாட்ஸ்ஆப்பினை பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்து , உங்கள் மொபைல் நம்பரை பயன்படுத்தி புதிதாக தொடங்கலாம்.

எனவே, வாட்ஸ்ஆப் வாசிகள் இது போன்ற போலியான செயலிகளை தவிர்ப்பது நல்லதாகும். அதிகார்வப்பூர்வமற்ற எந்த செயலியை தரவிறக்கினாலும் ஆபத்து நிச்சியம் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்..!