whatsapp news in tamil

உலகின் மிகப்பெரிய தகவல் பரிமாற்ற சமூக வலைதளமாக விளங்கும் வாட்ஸ்ஆப் செயலியில் பரவும் போலிச் செய்திகள் மற்றும் போலியான படங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள வழி வகுக்க திட்டமிட்டுள்ளதால் போலி செய்திகள் மற்றும் படங்கள் பரவுவது பெரும்பாலும் தடுக்கப்படும் என கருத்தப்படுகின்றது.

உலகளாவிய வலை தொடங்கிய 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை கண்டுபிடித்த டிம் பெர்னெர்ஸ் லீ போலி செய்திகள் மீதான வருத்தத்தை பதிவு செய்திருந்தார். கூகுள் உட்பட அனைத்து முன்னணி சமூக வலைதளங்களும் பொய் பரப்புரைகளை கண்டறிந்து நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

வாட்ஸ்ஆப்பில் இன்-ஆப் பிரவுசர் வசதி

in-App பிரவுசர் மூலம், குறிப்பாக இலகுவாக செய்திகளை பரிமாற வழிவகுக்கும் வாட்ஸ் ஆப்பில் போலிச் செய்திகள், தவறான மால்வேர் பொருந்திய இணைப்புகள், தவறான உள்ளடக்கம் கொண்ட பக்கங்களை கண்டறிந்து அதற்குகேற்ப பயனாளர்களுக்கு பாதுகாப்பு சார்ந்த எச்சரிக்கையை விடுக்கும் நோக்கில் இன்-ஆப் பிரவுசர் என பரிவை வாட்ஸ் ஆப் செயற்படுத்த திட்டமிடுள்ளதாக பிரபல பீட்டா சோதனை இணையமான wabetainfo குறிப்பிட்டுள்ளது.

மால்வேர் பொருந்திய இணைப்புகளை திறக்கும் போது  “Safe Browsing” நோக்கத்தை செயற்படுத்த கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட WebView v66 நுட்பத்தை கொண்டு பக்கத்தின் தன்மையை ஆராய்ந்து எச்சரிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வசதி சோதனை பீட்டா 2.19.74 பதிப்பாக உள்ளது. விரைவில் பொது பயன்பாட்டிற்கு கிடைக்கப்பெறலாம்.

WhatsApp browser test in-app web browser

இமேஜ் தேடும் வசதி

கூகுள் தனது தேடுதல் வலைதளத்தில் வழங்குகின்ற Search by image வசதியை அடிப்படையாக கொண்ட வகையில் இந்த வதி வடிவமைக்கப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி பார்வேர்டு செய்யப்படும் புகைப்படத்தை செர்ச் இமேஜ் (Search Image) ஆப்ஷன் மூலம் நேரடியாக கூகுளில் சென்று அதன் உண்மைத் தன்மையை ஆராயலாம். இந்த முறையால் போலிச்செய்திகள் ஓரளவுக்கு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஆப்ஷன் தற்போது பீட்டா 2.19.73 என்ற பதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

WhatsApp testing new 'Search image' feature

beta test image source – wabetainfo