ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை தினமும் 100 கோடி பயனாளர்கள் பயன்படுத்துவதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தினசரி 550 கோடி மெசேஜ் பரிமாறுவதாக தெரிவித்துள்ளது.

100 கோடி வாட்ஸ்அப்

சமூக வலைதளங்களில் பேஸ்புக் மாதந்தோறும் 200 கோடி பயனாளர்களை பெறும் நிலையில் அதன் துனை நிறுவனமாக விளங்கும் வாட்ஸ்அப் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கோடி பயனாளர்களையும், மாதந்தோறும் 130 கோடி பயனாளர்களையும் பெற்றுள்ளதாக தனது அதிகார்வப்பூர்வ தளத்தில் வாட்ஸ்அப் செய்தி வெளியிட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 55 பில்லியன் மெசேஜ்கள், 4.5 பில்லியன் படங்கள்,  1 பில்லயன் வீடியோ பரிமாறி கொள்வதாகவும், தற்போது 60 மொழிகளில் வாட்ஸ்அப் கிடைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் 450 மில்லியன் பயனாளர்களை கொண்ட நிறுவனமாக இருந்த வாட்ஸ்ஆப்பினை ஃபேஸ்புக் $19 பில்லியன் மதிப்பில் கையகப்படுத்தியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வந்த தினசரி மாறும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வசதியை தினசரி 250மில்லியன் பயனார்கள் பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஸ்னாப்சாட் செயலியில் உள்ள இதுபோன்ற வசதியை 166 மில்லியன் மக்களே பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ்அப் செயலில் உள்ள ஸ்டேட்டஸ் வசதி முதன்முறையாக ஸ்னாப்சாட்டில் இருந்து வந்த அம்சமாகும், இதனை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என இரண்டிலும் பல்வேறு வசதிகளை ஸ்னாப்சாட்டிலிருந்து ஃபேஸ்புக் காப்பி பேஸ்ட் செய்துள்ளது.