இந்தியா உள்பட உலகளவில் போலி செய்திகளை தடுக்க 20 நிபுணர் குழுவை தேர்வு செய்து செய்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிபுணர்கள், தவரான தகவல்களைபரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் துறையை சேர்ந்த சகுந்தலா பானாஜி, பெங்களூரை சேர்ந்த அனுஷி அகர்வால் மற்றும் நிஷா பாஷன ஆகியோர் “வாட்ஸ்அப் கண்காணிப்பு வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் இந்தியாவில் மொபைல் வன்முறைகள்” என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த ஆய்வில் வாட்ஸ்அப் பரவிய தவறான தகவல்கள் மூலம் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை தடுக்க இந்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ராஞ்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சைபர் பீஸ் அறக்கட்டளை விசாரணை அதிகாரி வினீத் குமார், டெல்லியை அடிப்படையாக கொண்ட சைபர் கபே அசோசியேஷன் தலைவர் அமிரிதா சவுத்திரி மற்றும் சைபர் பீஸ் அறக்கட்டளையை சேர்ந்த ஆனந்த் ராஜே போன்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதே போன்று 20 குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் “Digital literacy and impact of misinformation on emerging digital societies” என்ற தலைப்பில் அறிக்கை தாக்கல் செய்வார்கள். இந்த அறிக்கையை தொடர்ந்து, உலகளவில் இதுபோன்ற போலி தகவல் பரவுவதை தடுக்க 600-க்கு மேற்பட்ட குழுவை அமைக்க உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள 20 நிபுணர்கள் குழுகளுக்கும், அவர்களது ப்நிக்ளுகாக 50 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.