whatsapp-ios-users

இன்றைய நவீன உலகின் முதன்மையான வாட்ஸ்ஆப் (WhatsApp) தகவல் பரிமாற்ற செயலியில் அட்வான்ஸ்டு சர்ச் வசதியை சேர்க்க உள்ளதாக பீட்டா சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலமாக இலகுவாக வாட்ஸ்ஆப்பில் உள்ள தகவல்களை தேட இயலும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் வாட்ஸ்ஆப் செயல்பட்டு வரும் நிலையில், தகவல் தொடர்பான சேவையின் மேம்பாடுகள் உட்பட பல்வேறு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது.

வாட்ஸ்ஆப்பில் அட்வான்ஸ்டு சர்ச் வசதி

WABetainfo இணையதளத்தின் பீட்டா தொடர்பான சோதனைகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் இந்த தளம் சமீபத்தில் சோதனை செய்த போது தேடு இயந்திரம் தொடர்பான முறையை ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படுகின்ற மொபைல்களுக்கு தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கும் கொண்டுவரப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

வாட்ஸ்ஆப் க்ரூப் பயன்பாட்டாளர்களின் நூற்றுகணக்கான செய்திகளில் நம் விருப்பமான செய்திகளை மட்டும் படிக்க விரும்பினாலும், முழுதாக அனைத்தையும் பார்க்க வேண்டி இருக்கும், இனி இதுபோன்ற பிரச்சனையை தீர்க்க நீங்கள் உங்கள் க்ரூப்பில் ஆப்பிள் பற்றி தேடினால் அது தொடர்பான புகைப்படங்கள், ஆடியோக்கள், ஜிஃப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நம்மால் தேடி பெற இயலும்.

அட்வான்ஸ் சர்ச் தேடல் முதற்கட்டமாக ஐஓஎஸ் பயனாளர்களுக்கும், மிக விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் டார்க் மோட்( Dark Mode ), குரூப் இன்விடேஷன் (Group Invitation) ஆகிய அப்டேட்களை வழங்கி உள்ளது. சமீபத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது 10வது பிறந்த நாளை கொண்டாடியது.