பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள் உட்பட விரும்ப தகாத செய்திளுக்கு புகாரளிக்க வாட்ஸ்ஆப் சிறப்பு ஏற்பாட்டை வழங்கியுள்ளது. வேண்டபடாத செய்திகளுக்கு புகாரினை மத்திய தொலைத்தொடர்பு துறையிடம் புகார் அளிக்கலாம்.

வாட்ஆப்பில் வரும் விரும்பத்தகாத தகவலை ஸ்கிரீன் ஷாட் ஆக படம்பிடித்து அதனுடன் மொபைல் எண்ணையும் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என மத்திய தொலை தொடர்பு துறை அறிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் தவறான தகவல்களுக்கு புகார்

இந்தியாவில் வாட்ஸ்ஆப் மூலம் வதந்திகள் மற்றும் போலி செய்திகள் பரவுவதனை தடுக்கவும் பரப்புபவர்களையும் புகார் அளிக்க என பிரத்தியேக வசதியை செயற்படுத்தியுள்ளது. இந்த புகார் அளிக்கும் வசதி பெரும்பாலானவர்களுக்கு நன்மை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னணி ஊடகவியலாளர்கள் உட்பட பல பிரபல நபர்களுக்கு, தவறான படங்கள் மற்றும் செய்திகள் அதிகமாக பெறுவதைப் பற்றி புகார் வந்ததை தொடர்ந்து இந்த நடிவடிக்கையை தொலைத்தொடர்பு துறை மேற்கொண்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவையில் வாடிக்கையாளர்கள் விரும்பத்தகாத தகவல்களைப் பெறுவது என்பது அடிப்படை உரிம விதிமுறைகளை மீறுவதாகும், எனவே உடனடியாக இது போன்ற புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பது மொபைல் போன் நிறுவனங்களின் முக்கிய கடமை என மத்திய தொலை தொடர்புத்துறை கட்டுப்பாடு அதிகாரி அஷிஷ் ஜோஷி தெரவித்துள்ளார்.