விரைவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம்

உலகின் பிரசத்தி பெற்ற மெசேஞ் செயலியாக விளங்கும் வாட்ஸ்அப் வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு என வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்ற பெயரில் புதிய செயலியை வெளியிட உள்ளது.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப்

வாட்ஸ்அப் செயிலியை அடிப்படையாக கொண்டு வணிகரீதியான முயற்சியை தொடங்கியுள்ள இந்நிறுவனம் வாட்ஸ்அப் லோகோவில் B என்ற முத்திரையுடன் வெளியாக உள்ள ஆப்பினை பிளே ஸ்டோரில் தரவேற்றியுள்ளது.

மேலும் தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் FAQ பக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த பக்கத்தில் Verified என்றால் கணக்கு சரிபார்க்கப்பட்டு பச்சை நிற டிக் பேட்ஜ் வழங்கப்பட்டிருக்கும்.

Confirmed என்பதற்கு வணகரீதியான நிறுவனத்தின் எண் என உறுதி செய்யப்பட்டால் கிரே நிறத்திலான டிக் பேட்ஜ் வழங்கப்பட்டிருக்கும்.

Business account என்றால் வணிகரீதியான பிஸ்னஸ் செயலியை பயன்படுத்தினாலும் உறுதி செய்யப்படாமல் அல்லது சரிபார்க்கப்படாமல் உள்ள கணக்குகளுக்கு கிரே நிறத்திலான பேட்ஜ் உடன் கேள்வி மார்க் வழங்கப்பட்டிருக்கும்.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம் செய்யப்டும் போது வணிகரீதியான சேவைகளுக்கு உதவிகரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You