ஏசஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் புதிய லேப்டாப் மாடலாக வெளிவந்துள்ள ஏசஸ் க்ரோம்புக் ஃபிளிப் C213 மடிக்கணினியை எந்த பக்கமும் அதாவது 360 டிகிரி கோணத்தில் திருப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏசஸ் க்ரோம்புக் ஃபிளிப் C213

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏசஸ் க்ரோம்புக் ஃபிளிப் சி213 கன்வெர்ட்டிபிள் வகையைச் சேர்ந்த இந்த லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ள 360 டிகிரி கோணத்திலும் திருப்பும் வகையிலான ஹின்ஞ் உதவியுடன் எந்த பக்கமும் இதனை மடக்கலாம். மேலும் இந்த லேப்டாப் மிக தரமானதாக விளங்கும் என ஏசஸ் உறுதியளிக்கின்றது.

க்ரோம் ஓஎஸ் கொண்டு செயல்படுகின்ற ஏசஸ் க்ரோம்புக் ஃபிளிப் C213 மடிக்கணிடியில் கூகுள் ஆப்ஸ்களான கூகுள் கிளாஸ்ரூம்,கூகுள் க்ளவுட் மற்றும் ஜீ சூட் போன்றவையும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினியில் உள்ள ரப்பர் பம்பர் எதிர்பாரமல் லேப்டாப் விழுந்தால் எவ்விதமான பாதிப்பினை ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுளது. இதில் உள்ள ரப்பர் பம்பர்1.2 மீட்டர் உயரத்திலிருந்த லேப்டாப் விழுந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தடுக்கின்றது.

11.6 அங்குல திரை கொண்ட ஏசஸ் க்ரோம்புக் ஃபிளிப் C213 மடிக்கணினியில் 46Wh பேட்டரி இருப்பதனால் 12 மணி நேரம் வரை பேட்டரி தாக்குபிடிக்கும். இதில் இரண்டு வேரியண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு வேரியன்டில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப் விலை மற்றும் எப்பொழுது கிடைக்கும் போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.