உலகின் மிகப்பெரிய தகவல் பரிமாற்ற சமூக வலைதளமான வாட்ஸ்ஆப், சமீபத்தில் 2 மில்லியன் அதாவது 20 லட்சம் வாட்ஸ்ஆப் கனக்குளை முற்றிலும் நீக்கி அதிரிச்சி அளித்துள்ளது. நீக்கப்பட்ட 75 சதவீத கணக்குள் தானியங்கி முறையில் அதிகப்படியான மெசேஞ்களை அனுப்பி வந்துள்ளன.
இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெரும்பாலான சமூக வலைதளங்கள் மிக சிறப்பான முறையில் போலி செய்திகள் பரவுவதனை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றும் தளத்தை இந்திய அளவில் சுமார் 200 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்டுள்ள 2 மில்லியன் மொபைல் எண்கள் வாயிலாக இனி வாட்ஸ்ஆப் மூலம் அவர்கள் ஒரு செய்தியை கூட இனி பிரிமாற இயலாது. தடை செய்யப்பட்ட கணக்குகளில் 75 சதவித்துக்கும் அதிகமான கணக்குள் அதிகப்படியான பல்க் முறையில் செய்திகளை அனுப்பி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக, இதே போன்ற தொலைபேசி எண் சமீபத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கணினி நெட்வொர்க்கை பதிவு செய்வதற்கு சந்தேகத்திற்குரிய நடத்தை தொடர்புடையதாக இருந்தால், எங்கள் அமைப்புகள் கண்டறிய முடியும் என குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் போலி கணக்குகளை தொடங்கி அதன் மூலம் போலியான பரப்புரைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்களுக்கு மிகப்பெரிய சவாலினை வாட்ஸ்ஆப் இனி ஏற்படுத்த உள்ளது.