நமது தாய்மொழியில் செய்திகளை உடனுக்குடன் படிக்க மிக சிறப்பான முறையில் செய்தி வாசிப்பு அணுபவத்தை வழங்கும் மிக சிறந்த தமிழ் செய்திகள் ஆப்ஸ் பற்றி தெரிந்துகொள்ளலாம். பிரேக்கிங் நியூஸ், சினிமா செய்திகள் , டெக் நியூஸ் என பலவற்றை அறிய உதவும் செயலிகளை காணலாம்.

பிரேக்கிங் நியூஸ் தமிழில் படிக்க சிறந்த செய்திகள் ஆப்ஸ்

பெரும்பாலான முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு தனித்தன்மை கொண்ட ஆப்ஸ்களை வழங்கினாலும் அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் படிக்கும் வகையில் உதவும் வகையிலான சிறந்த செயலிகளை காணலாம்.

சிறந்த தமிழ் செய்திகள் ஆப்ஸ்

1. டெய்லிஹண்ட்

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வழங்கப்படுகின்ற டெய்லிஹண்ட் (நியூஸ்ஹண்ட்) அதிகப்படியான பயணர்களை கொண்டுள்ள மிக முக்கியமான செயலியாகும். இந்த செயலில் பலதரப்பட்ட செய்தி பிரிவுகளை வழங்குவதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னணி செய்தி தளங்களின் செய்திகளை மட்டுமே வழங்குவதனால் தனியான இடத்தை பெற்று விளங்குகின்றது. டெய்லிஹண்ட்டில் முக்கிய செய்திளை சிறப்பு பிரிவாக வழங்குகின்றது. மேலும் பல்வேறு இலவச புத்தகங்கள் , வார இதழ்க் , மாதந்திர இதழ்கள் போன்றவற்றை சலுகை கட்டணத்தில் வழங்குகின்றது.

தமிழில் 35 க்கு மேற்பட்ட செய்திதளங்களை கொண்ட பல்வேறு பிரிவுகளை கொண்டிருப்பதுடன் வீடியோக்களையும் வழங்குகின்றது.மாதந்தோறும் சராசரியாக 3 பில்லியன் பார்வைகளை டெய்லிஹண்ட் பதிவு செய்கின்றதாம்.

கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் பயனர்களுக்கு கிடைக்கின்றது.

பிரேக்கிங் நியூஸ் தமிழில் படிக்க சிறந்த செய்திகள் ஆப்ஸ்

2. நியூஸ்டிஸ்டில்

நமது பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள நியூஸ்டிஸ்டில் செயலி மிக சிறப்பான நவீன அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டெய்லிஹென்டை போன்றே மிக சிறந்த செய்தி சேனல்களை கொண்டுள்ள இந்த செயலிலும் பல தரப்பட்ட வசதிகள் கொண்டதாக விளங்கும் இந்த ஆப்பில் மொத்தம் 40 செய்தி சேனல்களின் செய்திகள் மற்றும் வீடியோ போன்றவை இடம்பெற்றுள்ளது.

ஆப்பிள் , கூகுள் பிளே மற்றும் கணினிகளிலும் நியூஸ்டிஸ்டில் கிடைக்கின்றது.

பிரேக்கிங் நியூஸ் தமிழில் படிக்க சிறந்த செய்திகள் ஆப்ஸ்

3. யூசி நியூஸ்

பிரசத்தி பெற்ற யூசி பிரவுசரின் புதிய முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யூசி நியுஸ் (UC News) ஆப் மிக வேகமாக செயல்படும் வகையில் அமைந்திருந்துள்ளது. பலதரப்பட்ட செய்தி சேனல்களை கொண்டுள்ள இந்த செயலி தற்பொழுது மேம்பாட்டு நிலையிலே உள்ளது. யூசி பிரவுசர் வாயிலாகவும் பயன்படுத்தலாம் என்பதனால் தனியான செய்தி ஆப்ஸ் தேவையில்லை என்ற பொழுதும் தனியான செயலில் பல வசதிகளை வழங்குகின்றது. ஆனால் வந்த செய்திகளே திரும்ப திரும்ப வருவதனால் சற்று சலிப்பூட்டுகின்றது.

ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே பயனர்களுக்கு மட்டுமே தற்சமயம் கிடைக்கின்றது.

பிரேக்கிங் நியூஸ் தமிழில் படிக்க சிறந்த செய்திகள் ஆப்ஸ்

4. நியூஸ்டாக்

தமிழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மற்றொரு செயலியான நியூஸ்டாக் (NewsDog) செயலில் பல முன்னணி செய்தி சேனல்கள் பெற்றிருப்பதுடன் மற்ற செயலிகளை காட்டிலும் மிக வேகமாகவும் இலகு எடை கொண்டதாக இயங்குகின்றது. ஆனால் ஆபாச தன்மை கொண்ட செய்திகளும் இடம்பெற்றிருப்பது வருத்தமளிக்கும் செய்தியே இதனை நியூஸ்டாக் குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆப்பிள் , கூகுள் பிளே மற்றும் கணினிகளிலும் நியூஸ்டாக் கிடைக்கின்றது.

பிரேக்கிங் நியூஸ் தமிழில் படிக்க சிறந்த செய்திகள் ஆப்ஸ்

கொடுக்கப்பட்டுள்ள செயிலிகள் தவிர கூகுள் நியூஸ் உள்பட பல்வேறு சேனல்களின் தனி செயலிகளும் கிடைக்கின்றது. உங்கள் விருப்பமான செயலி எது என பதிவு செய்யுங்கள் நமது தளம் தற்பொழுது டெய்லிஹண்ட் தவிர மற்ற மூன்றிலும் கேட்ஜெட்ஸ் தமிழன் கிடைக்கின்றது.