இந்திய அரசு டிஜிட்டல் முறை பரிவர்த்தணையை அதிகரிக்கும் நோக்கில் பாரத் QR கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக வேகமாக மின்னனு பரிவர்த்தனையை செய்யும் நோக்கில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் செயல்பாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது.

பாரத் QR

கருப்புப்பணம் மற்றும் ஊழல் போன்றவற்றுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் யூபிஐ , யூஎஸ்எஸ்டி மற்றும் பீம் ஆப் போன்றவற்றின் வாயிலாக பணம் பெறுதல் அனுப்புதல் போன்றவற்றை செயல்படுத்தி வரும் நிலையில் புதிதாக பாரத் க்யூஆர் கோடினை அறிமுகம் செய்துள்ளது.

QR கோடு என்றால் என்ன ?

க்யூஆர் கோடு என்றால் மிக (QR – quick response code) விரைவாக பணம் செலுத்துதல் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்பொழுது க்யூஆர் கோடுகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில் பாயின்ட் ஆஃப் சேல் எனப்படும் மின்னனு பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில் பாரத் க்யூஆர் வந்துள்ளது.

பாரத் க்யூஆர் என்றால் என்ன ?

மத்திய அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாரத் க்யூஆர் ஆனது விசா , மாஸ்ட்ரோ , ரூபே போன்ற கார்டுகளில் செயல்படும் வகையில் வந்துள்ளது. இந்த கோடினை விற்பனையாளர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தும் வகையில் உபயோகிக்கும் பொழுது இருமுறை சரிபார்ப்பு வழிகளிலே பணம் செலுத்தலாம் எனவே பாதுகாப்பான முறையில் பாயின்ட் ஆஃப் சேல் மேற்கொள்ள இயலும்.

வாடிக்கையாளர்கள் நன்மைகள்

பாரத் க்யூஆர் கோடினை பயன்படுத்தி பொருட்களை வாங்கும்பொழுது மிக சிறப்பான முறையில் பாதுகாப்பினை உறுதி செய்ய இயலும். குறிப்பாக நீங்கள் உங்கள் வங்கி கணக்கு ஆப் வழியாகவோ , பீம் போன்ற ஆப்ஸ்கள் வாயிலாக பொருட்களை வாங்கும்பொழுது க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்த உடன் விலை உள்பட பல விபரங்கள் விரைவாக தோன்றி பணத்தை தெலுத்த இயலும். இருமுறை சரிபார்ப்பு முறை உள்ளதால் பின் சரிபார்த்த பின்னர் பணத்தை செலுத்த முடியும்.

விற்பனையாளர் நன்மைகள்

பாரத் க்யூஆர் கோடினை உருவாக்கி பொருட்களின் மீது அதன் க்யூஆர் கோடினை பயன்படுத்தி பொருட்களுக்கான பணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்தி உடன் அடுத்த நொடியே உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும் என்பதால் விரைவாக பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பாரத் க்யூஆர் பாதுகாப்பு அம்சம்

டெபிட் அல்லது கிரெடிட்கார்டு வழியாக பணத்தை செலுத்தும்பொழுது இருமுறை சரிபார்ப்பு முறை மேற்கொள்ளப்படுதவதனால் ஓடிபி (OTP) எனப்படும் ஒருமுறை தனிநபர் எண் மொபைல் எண்ணிற்கு வந்த பின்னர் அதனை உறுதிப்படுத்தியே பணத்தை செலுத்தலாம்.

எந்த ஆப்சில் கிடைக்கும்

முதற்கட்டமாக ஐசிஐசிஐ பாக்கெட் ஆப்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி பேஜேப் ஆப்ஸ் வாயிலாக கிடைக்க தொடங்கி உள்ள பாரத் QR விரைவில் மற்ற மொபைல் பேங்க் ஆப்களிலும் , பீம் செயலிலும் கிடைக்க உள்ளது.