டிஜிட்டல் முறையிலான பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில் வெளிவந்துள்ள பீம் ஆப்  (bhim) தற்பொழுது தமிழ் மொழி உள்பட 8 மொழிகளில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கின்றது.

தமிழ் மொழியில் பீம் ஆப் அறிமுகம்

பீம் ஆப்

UPI -யை அடிப்படையாக கொண்ட பீம் பணபரிவர்த்தனை செயிலியை National Payments Corporation of India (NPCI) கடந்த மாதம் அறிமுகம் செய்திருந்த நிலையில் முதற்கட்டமாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிடைத்து வந்த பீம் ஆப் தற்பொழுது தமில் உள்பட பெங்காலி , கன்னடம் ,குஜராத்தி , மலையாளம் , தெலுங்கு மற்றும் ஒடியா போன்ற மொழிகளிலும் கிடைக்கின்ளது.

மேம்படுத்தப்பட்டுள்ள வெர்ஷன் 1.2 பதிப்பில் கூடுதலாக ஆதார் எண் அடிப்படையிலான பணம் செலுத்தும் முறை , எரிதம் தகவல்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வருகின்ற செய்திகளை கட்டுப்படுத்தும் மற்றும் வாடிக்கையாளர் குறைகளை தீர்க்கும் ஆப்ஷனில் மேம்பாடுகளை பெற்றுள்ளது.

மேலும் தனியரிமை அமைப்பில்கூடுதலாக  [email protected] வசதி , டியூவல் சிம் மொபைலில் எண்களை மாற்றும் வசதி போன்றவை கிடைக்கும்.

அதிகார்வப்பூர்வமான கூகுள் பிளே ஆப்ஸை தரவிறக்க முகவரி இதோ – பீம் ஆப்

பீம் செயலி வாயிலாக கட்டணங்களை மிக விரைவாக செலுத்த மிக சிறப்பான செயலியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here