பரவலாக அனைவரும் சமூக வலைதளங்களில் கில்லர் கேம் ப்ளூவேல் சேலஞ்ச் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியிருந்தாலும், ஆனால் தற்கொலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

புளூவேல் கேம் : தற்கொலையை தடுக்க என்ன செய்யலாம்

கில்லர் ப்ளூவேல் கேம்

புளூவேல் கேமில் உள்ள படிகளில் நடுநிசியில் பேய் படம் பார்ப்பது, ஆளில்லாத இடத்தில் தன்னந்தனியே நடந்து செல்வது, திமிங்கலத்தின் உருவத்தை கையில் கீறி வரைவது என நீளும் இந்த படிநிலைகள் இறுதியில் தற்கொலையில் முடிகின்றது.

புளூவேல் கேம் : தற்கொலையை தடுக்க என்ன செய்யலாம்

50 படி நிலைகள் வரை கொண்ட இந்த ஆன்லைன் விளையாட்டு இறுதிநிலையில் தற்கொலை செய்துகொள்வதில் முடியும் இந்த ஆன்லைன் கேமினால் ரஷ்யாவில் 130 க்கு மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சர்வதேச அளவில் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கின்ற இந்த விளையாட்டு இறுதி இடமாக எதனையும் அனுமதிக்கும் இலவச இடமான இந்தியாவில் தனது ஆட்சியை தொடங்கி பரவலாக தனது ஆயுதத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் எந்த மரணமும் நிகழவில்லை என பெருமூச்சு விட்ட நிலையில் முதல் தற்கொலை மதுரை திருமங்கலத்தில் நிகழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

குழந்தைகளை கண்கானியுங்கள்

டெக் உலகின் ஜாம்பவான், உலகின் முதன்மையான பணக்காரராக விளங்கும் பில் கேட்ஸ் தனது குழந்தைகளுக்கு பதின் வயது வரை மொபைல் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தவதற்கு தடை விதித்துள்ளார் என அறிந்திருப்போம்.

புளூவேல் கேம் : தற்கொலையை தடுக்க என்ன செய்யலாம்

பில் கேட்ஸ் மட்டுமல்ல , ஒபாமா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் என பலரும் மேற்கத்திய நாடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதுவரை சமூக வலைதளங்கள், மொபைல் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்த அனுமதிப்பதில்லை, ஆனால் நமது நாட்டில் 5 வயது உள்ள குழந்தை மொபைலில் கேம் விளையாடுகின்றது என்றால் வியந்து பார்த்து கொண்டிருக்கின்றோம்.

கேம் விளையாடும் சமயங்களில் குழந்தைகள் நம்மை தொல்லை செய்வதில்லை என்பதனால், குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆன்லைன் மற்றும் மொபைல் கேம்கள் விளையாட நாம் ஊக்குவிப்பதன் பின்னணியே ப்ளூவேல் போன்ற தற்கொலையை தூண்டுகின்ற கேம்களுக்கு குழந்தைகளை அடிமையாகிறார்கள்.

இந்த முறையால் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்திறன் முற்றிலும் குன்றுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

புளூவேல் கேம் : தற்கொலையை தடுக்க என்ன செய்யலாம்

அரசு மீது குறையா ?

மத்திய அரசு சமூக வலைதளங்கள் மற்றும் தேடுதல் தளங்களில் புளூவேல் கேம் இணைப்பு மற்றும் அதன் தொடர்புகளை நீக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தாலும்,இவைகள் நீக்குவதில் கால தாமதம் ஏற்படும். மேலும் இந்த தளங்கள் மாற்றுப் பெயரில் உடனடியாக பயன்பாட்டுக்கு வந்துவிடும். எனவே, அரசின் மீது குற்றம் சுமத்துவதனை தவிர்த்து குழந்தைகள் மீதான கண்கானிப்பை அதிகரியுங்கள்.

உங்கள் குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுங்கள், மொபைல் மற்றும் கணினிகள் மீது ஆர்வம் கொண்டுள்ள குழந்தைகளை தொடர்ந்து கண்கானித்து வாருங்கள்.

கூகுள் தேடுதலில் முதலிடத்தில் யார் ?

சர்வதேச அளவில் ப்ளூவேல் கேம் பற்றிய கூகுள் தேடுதலில் மிக அதிகம் தேடப்பட்ட நகரங்களில் கொல்கத்தா இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சான் அன்டோனியோ, நைரோபி, கவுகாத்தி, சென்னை, பெங்களூரு, மும்பை, புதுடெல்லி, ஹவுரா, பிரான்ஸ் உள்ளிட்ட நகரங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

எனவே, தொடர்ந்து உங்கள் குழந்தைகள் மீதான கண்கானிப்பை வைத்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here