உலகின் மிகவும் மதிப்புமிக்க டாப் 100 பிராண்டுகளில் முதல் 10 இடங்களை டெக்னாலாஜி நிறுவனங்களே பிடித்துள்ளது. முதலிடத்தில் இணைய உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படுகின்ற கூகுள் இடம்பெற்றுள்ளது.

மதிப்புமிக்க டாப் 100 பிராண்டு

பிராண்ட்ஸ் (TOP 100 BRANDZ 2017) 2017 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் உலின் முன்னணி தேடுதல் தளமான கூகுள் நிறுவனம் $245,581 மில்லியன் மதிப்புடன் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

இரண்டாவது இடத்தில் மற்றொரு டெக் நிறுவனமான ஆப்பிள் பிராண்டு $234,671 மில்லியன் மதிப்புடன் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் $143,22 மில்லியன் மதிப்புடன் விளங்குகின்றது.

முதல் 10 இடங்களில் 7 இடங்களை நேரடி டெக்னாலாஜி நிறுவனங்களும், அமேசான் ரீடெயிலர் (4வது இடம்), அமெரிக்காவின் தொலை தொடர்பு நிறுவனம் AT &T (6வது இடம்) மற்றும் உணவு பொருட்கள் தயாரிபாளரான மெக்டொனால்ட்ஸ் (10வது இடம்) நிறுவனம் மற்றும் விசா (7வது) நிறுவனமும் இடம்பிடித்துள்ளது.

5வது இடத்தில் ஃபேஸ்புக், 8வது இடத்தில் டென்சென்ட் மற்றும் 9வதுஇடத்தில் ஐபிஎம் உள்ளது. இதுதவிர டெக் நிறுவனங்களான நெட்ஃபீலிக்ஸ், யூடியூப் மற்றும் ஸ்னாப்சாட் போன்றவையும் இடம்பெற்றுள்ளது.

முதல் 10 இடங்களை பிடித்துள்ள நிறுவனங்களை புகைப்பட பட்டியலில் காணலாம்.