பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம், தனது பிராட்பேண்ட் பயனாளர்களுக்கு இலவசமாக உலக கோப்பை கிரிக்கெட் 2019 போட்டிகளை ஹாட்ஸ்டார் வாயிலாக காண்பதற்கான இரண்டு புதிய கம்பி வழி பிளான்களை அறிவித்துள்ளது.

இந்திய டெலிகாம் ஆப்ரேட்ட்களில் 4ஜி சேவை வழங்குவதில் முன்னணி வகிக்கும் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமும் இலவசமாக தங்களது பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் 2019

ஜியோ டெலிகாம் நிறுவனம், ஹாட்ஸ்டார் ஆப் வாயிலாக வழங்கி வரும் நிலையில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிராட்பேண்ட் பயனாளர்களக்கு சூப்பர் ஸ்டார் 300 என்ற திட்டத்தினை ரூபாய் 749 கட்டணத்தில் ஒரு மாதம் செல்லுபடியாகின்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த பிளானில் பயனாளர்கள் அதிகபட்சமாக 50 mbps வேகத்தில் மொத்தமாக 300 ஜிபி டேட்டா, டேட்டா அளவை கடந்த பிறகு 2 mbps வேகத்தில் வரம்பற்ற முறையில் இணையத்தை பெற பிஎஸ்என்எல் இந்த பிளானை செயற்படுத்தியுள்ளது.

நான்-ஆப்டிக் ஃபைபர் கேபிள் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு 10 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 300 ஜிபி டேட்டாவை, டேட்டா வரம்பினை கடந்த பிறகு 2 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணையத்தை தொடர்ந்து பெறலாம்.

பிஎஸ்என்எல் மற்றும் ஹாட்ஸ்டார் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹாட்ஸ்டார் பிரீமியத்தின் சந்தாவுடன் தொகுக்கப்பட்ட 50 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 300 ஜிபி டேட்டாவை, இந்த பேக் வழங்குகிறது, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப உலகக் கோப்பை கிரிக்கெட் உள்ளிட்ட இடைவிடாத பொழுதுபோக்கு மற்றும் நேரடி போட்டிகளை பார்க்கவும் ரசிக்கவும் விருப்பம் அளிக்கிறது, என குறிப்பிடப்பட்டுள்ளது.