இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை அரசு தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கியுள்ளது

பிஎஸ்என்எல் 5ஜி வருகை

4ஜி சேவையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் எதிர்கால நலனை கருதி பிஎஸ்என்எல் 5ஜி சேவைக்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் 5ஜி சேவைக்கான சோதனை ஓட்ட பணிகளை பிஎஸ்என்எல் தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப்பா ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் தெரிவித்த விபரத்தை தொடர்ந்து காணலாம்.

இந்த நிதி ஆண்டிற்குள் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவைக்கான ஆரம்பகட்ட பணிகளை பிஎஸ்என்எல் தொடங்கவதற்கான பணிகளை திட்டமிட்டுள்ளோம். மேலும் லார்சன் & டூப்ரோ மற்றும் ஹெச்பி நிறுவனங்களுடன் இணைந்த 5ஜி சோதனைக்கான சாதனங்களை உருவாக்கவதிலும், கோரியன்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து நுட்பம் சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வரவுள்ள இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் அம்சங்களை பெறுவதற்கு கோரியன்ட் நிறுவனத்துடன் இணைந்து சுகாதார பராமரிப்பு, தொழில்துறை ஆட்டோமேஷன், பொது பாதுகாப்பு, வீடியோ கண்காணிப்பு, விவசாயம் மற்றும் வாகன துறை சார்ந்த இணைப்புகளுக்கான அறிவினை பெறும் நோக்கில் செயல்பட உள்ளது.

இந்த நிதி ஆண்டின் இறுதி மாதங்களில் பிஎஸ்என்எல் 5ஜி சேவைக்கான ஆரம்பகட்ட சோதனை ஓட்டம் தொடங்கப்படலாம்.