நாட்டின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.2000 விலையில் பண்டில் சலுகைகளை கொண்ட ஃபீச்சர் ரக பிஎஸ்என்எல் போன் மாடலை லாவா அல்லது மைக்ரோமேக்ஸ் வாயிலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிஎஸ்என்எல் போன்

எக்கனாமிக் டைம்ஸ் இதழுக்கு பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநர் அனுபம் வஸ்தவா அளித்துள்ள பேட்டியில் ரூ.2000 விலையில் சிறப்பான சலுகைகள் மற்றும் டேட்டா ஆகியவற்றை கொண்டதாக வழங்கப்பட உள்ள இந்த மொபைல் போன் லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மொபைல் போன் சிறப்பான பல்வேறு சலுகைகளுடன் வாய்ஸ் அழைப்புகளுக்கு என பல்வேறு பிளான்களை செயல்படுத்த உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஜியோபோன் மற்றும் ரூ.2500 விலையில் வரவுள்ள ஏர்டெல் போன் ஆகியவற்றுக்கு மிகுந்த சவாலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள் வாயிலாக தயாரிக்கப்பட உள்ளதால் பல்வேறு வசதிகளுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.