குறைந்த விலை பி.எஸ்.என்.எல் மொபைல் போன் தயாரிக்கும் திட்டம்இந்தியாவின் பொது தொலைத்தொடர்புத் துறை பி.எஸ்.என்.எல் நிறுவனம் குறைந்த விலை மொபைல் போன் தயாரிக்க லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தத்தை பிஎஸ்என்எல் மேற்கொண்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் போன்

குறைந்த விலை பி.எஸ்.என்.எல் மொபைல் போன் தயாரிக்கும் திட்டம்

ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் ரூ.1500 விலையில் நிகர மதிப்பு அடிப்படையில் இலவச ஜியோபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனம் ரூ.2500 விலையில் குறைந்த விலை ஆண்ட்ராய்டு போனை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் போட்டியாளர்களை சமாளிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய தயாரிப்பாளர்களான லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த விலை மொபைல் போன் ஒன்றை சிறப்பு சலுகைகள் மற்றும் டேட்டா ஆஃபர் ஆகியவற்றை வழங்கலாம்.

இது குறித்து பி.எஸ்.என்.எல் டெலிகாம் பிரிவின் ஐதராபாத் தொலைதொடர்பு மாவட்ட தலைமை பொது மேலாளர் ராம்சந்த் கூறுகையில், பயனாளர்களுக்கு பிஎஸ்என்எல் சிம் கார்டுடன் கூடிய மிக குறைந்த விலையில் மொபைல் போன்களையும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த சிம் கார்டுக்கு பல சலுகைகளும் வழங்கப்பட உள்ளது.

மேலும் தற்போது ஐதராபாத்தில் 6 பகுதிகளில் வைபை வசதி செய்து கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 112 பகுதிகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என கூறியுள்ளார்.

குறைந்த விலை பி.எஸ்.என்.எல் மொபைல் போன் தயாரிக்கும் திட்டம்

சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.429 க்கு புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டிருந்த திட்டத்தின் கீழ் வரம்பற்ற  உள்ளூர், வெளியூர் அழைப்புகள் , தினமும் 1 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

குறைந்த விலை பி.எஸ்.என்.எல் மொபைல் போன் தயாரிக்கும் திட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here