கனடா எட்மன்டன் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் பறவைகள் பறக்காமல் தடுப்பதற்காக எந்திர ராஜாளிப்பறவையை உருவாக்கியுள்ளனர்.

விமான ஓடுபாதையை கண்காணிக்க எந்திர ராஜாளிப்பறவை

எந்திர ராஜாளிப்பறவை

விமானங்களுக்கு பறவைகளால் மிகப்பெரிய ஆபத்து உள்ளதால் இதற்காக பல்வேறு விதமான நடவடிக்கைகளை விமானத்துறை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த 2011 முதல் 2015 வரையிலான கால கட்டத்தில் விமானத்தில் பறவைகளால் 56,000 மேற்பட்ட ஆபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. விமானங்களில் உள்ள டர்பைன்களில் பறவை சிக்கினால் விமான விபத்துக்குள்ளாவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

விமான ஓடுபாதையை கண்காணிக்க எந்திர ராஜாளிப்பறவை

இதுபோன்ற விபத்தினை தடுக்கும் வகையில் பறவைகளை கண்கானிக்க மற்றும் விரட்டுவதற்கு கனடா சர்வதேச விமான நிலையத்தில் கேரியர்ஃபிளைட் தயாரித்த ரோபோட்டிக் நுட்பத்துடன் கூடிய ராஜாளிப்பறவை போன்ற தோற்றறத்தை வெளிப்படுத்தும் எந்திரப்பறவை பயன்படுத்தி வருகின்றனர்.

ரோபோட்டிக் பறவையை நிஜ பறவைகள் கண்டால் உடனடியாகவே தங்களின் எதிரி என்று நினைத்துக் கொண்டு விமான நிலையத்தின் ஓடுபாதையை விட்டு பறந்துவிடுவதாக கனடிய சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here