சூரிய குடும்பத்தின் மிக முக்கியமான மற்றும் அழகான கோள் என வர்ணிக்கப்படும் சனி கோள் ஆய்வின் இறுதி கட்டத்தில் உள்ள காசினி சனிகிரகத்தின் வளையத்திலிருந்து முதல் படத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது.

காசினி அனுப்பிய சனி கிரக வளையத்தின் முதல் படங்கள்

சனி கிரக வளைய படங்கள்

 • 1997 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட காசினி 2004 ஆம் ஆண்டில் சனிக்கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது.
 • சனிக்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரம் உள்ள படங்களை அனுப்பியுள்ளது.
 • இறுதி பயணத்தை ஏப்ரல் 26ந் தேதி டெத் டைவ் என்ற பெயரில் கோளுக்கும் வளையத்துக்கும் இடையில் பயணிக்க தொடங்கியது.

காசினி அனுப்பிய சனி கிரக வளையத்தின் முதல் படங்கள்

கடந்த 26ந் தேதி டெத் டைவ் தொடங்கிய கெசினி 22 டைவ்களுக்கு பிறகு சுமார் 24 மணி நேரத்துக்கு பூமி உடனான தொடர்பை இழந்திருந்த நிலையில் மீண்டும் தன்னுடைய இறுதி பயணத்தில் கோளுக்கும் வளையத்துக்கும் இடையிலான படங்களை பூமிக்கு அனுப்ப தொடங்கியுள்ளது.

காசினி அனுப்பிய சனி கிரக வளையத்தின் முதல் படங்கள்

இந்த விண்கலம் சுமார் 77,000 மைல் வேகத்தில் இந்த வளையத்துக்குள் பயணித்து 22 டைவ் அடித்த பிறகு புகை, பனி படலங்கள் மற்றும் எவ்விதமான பொருட்களாலும் ஆன்டனா உள்பட எந்த பாகங்களிலும் பாதிப்பு ஏற்படாமல் மீண்டும் படங்களை அனுப்ப தொடங்கியுள்ளது.

காசினி அனுப்பிய சனி கிரக வளையத்தின் முதல் படங்கள்

கெசினி விண்கலம் டைம்லைன் தகவல்கள்

 • அக்டோபர் 15,1997 ஆம் ஆண்டு விண்ணில் கெசினி ஏவப்பட்டது.
 • 2004 ஆம் ஆண்டு அதாவது 7 ஆண்டு பயணத்துக்கு பிறகு ஜூன் 30,2004 சனிக்கோளின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது.
 • மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒன்று உலகிலிருந்து மிக அதிக தொலைவில் தரையிறக்கப்படுவது 2005ஆம் ஆண்டு ஜனவரி 14ல் நடந்தேறியது.
 • கடந்த வருடங்களில் பல தகவல்கள் மற்றும் விபரங்களை அடங்கிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.
 • 2009 ஆம் ஆண்டு சனிக்கோளின் டைட்டன் என்ற துணைக்கோள்களில் திரவ பொருட்கள் இருப்பதை உறுதி செய்தது.
 • 2015 ஆம் ஆண்டில் உயிர்வாழ தேவையான ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்தது.
 • 2017 ல் நுன்னுயிர்கள் வாழ்வதற்கான ஆதாரம் உள்ள படங்களை அனுப்பியது.
 • கடந்த ஏப்ரல் 26 , 2017ல் கிராண்ட் பைனல் என பெயரிடப்பட்டு சனி கோளுக்கும் வளையத்துக்கும் நடுவே 22 டைவ்களை மணிக்கு 77,000 மைல் வேகத்தில் மேற்கொண்டது.
 • வருகின்ற செப்டம்பர் 15 , 2017ல் தனது வாழ்நாளை காசினி நிறைவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காசினி அனுப்பிய சனி கிரக வளையத்தின் முதல் படங்கள் காசினி அனுப்பிய சனி கிரக வளையத்தின் முதல் படங்கள் காசினி அனுப்பிய சனி கிரக வளையத்தின் முதல் படங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here