Celebrating Pride என்றால் என்ன ? 1950ம் ஆண்டு முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள் போராட்டத்தை தொடங்கினர், இதனை குறிக்கும் வகையில் Celebrating Pride என்ற டூடுல் கூகுள் முகப்பை அலங்கரித்துள்ளது.
ஆண் மற்றும் பெண் என எதிர்பாலினத்தவரை, கடந்த தன்பால் மீது ஏற்படும் ஈரப்புக்கு இந்தியாவில் தன்பாலின உறவு குற்றம் எனக்கூறும் 377வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டு இந்தியாவில் LGBTQI சமூகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Celebrating Pride டூடுல்
இந்தியா உட்பட 28 நாடுகளில் தன்பாலின உறவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அர்ஜெண்டீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெய்ன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க், உட்பட 28 நாடுகளில் ஓரினச்சேர்க்கை அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால், 167 நாடுகளில் தன்பால் சேர்க்கை குற்றமாகும்.
எல்ஜிபிடி என்றால் என்ன ?
பெண்ணை விரும்பும் பெண் இதனை லெஸ்பியன் (Lesbian), ஆணை விரும்பும் ஆண் (Gay), இருபாலின உறவை விரும்புவோர் (Bisexual), திருநங்கைகள் (Transgender) ஆகியோர் LGBT என்று அழைக்கப்படுகிறார்கள். 1980களில் LGBT என்ற வார்த்தை அறிமுகமானது.
முதலில் 1950 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சுய உதவி மற்றும் சுய ஏற்புக்காக ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றுக்கூடி போராட்டத்தை தொடங்கினர். எல்ஜிபிடி போராட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஜூன் மாதத்தை பிரைடு மாதம் என கொண்டாடி வருகின்றனர். பின்னர், 1960 மற்றும் 70களில் அவர்களுடைய உரிமைக்காக போராடத்தொடங்கினர். படிப்படியாக முன்னேறிய இவர்களது போராட்டம், 2000ம் ஆண்டில் திருமணத்திற்கான போராட்டம் என முன்னேறியது. உலகில் முதல்முறையாக 2000-ம் ஆண்டு நெதர்லாந்தில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. ஆசிய நாடுகளில் தைவான் நாடு தன்பாலின சேர்க்கை சட்டப்பூர்வமாக்கியது.
image credit- pride.google.com
எல்ஜிபிடி சமூகத்துக்கு என பிரத்தியேகமான 8 நிறத்திலான கொடியை 1978ஆம் ஆண்டு கில்பெர்ட் பேக்கர் என்பவர் அறிமுகப்படுத்தினார். பின்பு, இந்த கொடி தற்போது 6 நிறங்கள் மட்டுமே கொண்டதாக விளங்குகின்றது.