CES 2019 : உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய கண்டுபடிப்புகள் அனைத்தும் நுகர்வோர் கண்காட்சி நிகழ்ச்சி 2019 (Consumer Exhibition Show 2019 -CES 2019) அரங்கில் லாஸ் வேகாஸ் நகரில் ஜனவரி 8 முதல் ஜனவரி 11 வரை காட்சிக்கு வரவுள்ளது.

CES 2019

இந்நிகழ்வில் உலகின் முன்னணி டெக்னாலாஜி நிறுவனங்கள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகள், முன்னணி கார் நிறுவனங்களின் டெக்னாலாஜி சார்ந்த கண்டுபிடிப்புகள் என மொத்தமாக கேட்ஜெட்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான கண்காட்சியாக சிஇஎஸ் 2019 விளங்க உள்ளது.

5ஜி

சிஇஎஸ் 2019 நிகழ்வில் அடுத்த தலைமுறை நெட்வொர்க் சேவையாக கருதப்படுகிற மிக முக்கியமான 5ஜி தொடர்பான சேவைகள் மற்றும் நுட்பங்கள் இடம்பெற்ற கேட்ஜெட்கள் முக்கியத்துவத்தை பெற உள்ளது. குறிப்பாக 5ஜி ஸ்மார்ட்போன், பிசி , ஹோம் ஆட்டோமேஷன் மற்றும் IoT அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

தொலைக்காட்சி

சாம்சங், எல்ஜி, டிசிஎல், பானாசோனிக் போன்ற முன்னணி ஸ்மார்ட் டிவி தயாரிப்பாளர்கள் 8K ரெசலியூசன் அம்சத்தை பெற்ற டிவிக்கள் மற்றும் 4K ரெசலியூசனில் பல்வேறு அம்சங்களை பெற்ற புதிய டிவி மாடல்கள் மென்பொருள் சார்ந்த மேம்பாடுகள், வாய்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும்.

ஆட்டோமொபைல்

முன்னணி மோட்டார் கார் தயாரிப்பாளர்களான ஆடி, பிஎம்டபிள்யூ, யமஹா, ஹூண்டாய், மிட்ஷூபிசி போன்ற நிறுவனங்கள் நவீன டெக்னாலாஜி சார்ந்த அம்சங்களை CES 2019 கண்காட்சியில் வெளியிட உள்ளன.

இதைத் தவிர முன்னணி குவால்காம், இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள், விரிச்சுவல் ரியாலிட்டி, ஆர்க்யூமென்டேட் ரியாலிட்டி, ஸ்மார்ட் ஹோம், என பல்வேறு நுட்பங்கள் காட்சிக்கு வரவுள்ளது.

CES 2019 எங்கே நடைபெறுகிறது ?

நெவெதா, லாஸ் வேகாஸ் நகரில் பொதுமக்கள் பார்வைக்கு ஜனவரி 8ம் தேதி துவங்கி 11ம் தேதி நிறைவடைகிறது. என்னென்ன கேட்ஜெட்கள் முன்கூட்டியே ப்ரீ ஷோ வாயிலாக ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் அறிந்து கொள்ளலாம்.