சீனாவை மையமாக கொண்டு செயல்படும் சியோமி நிறுவனத்தின் Mi ஹோம் ஸ்டோர் சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் திறக்கப்பட்டுள்ளது.

Mi-Home-Store-in-Chennai

சியோமி Mi ஹோம் ஸ்டோர்

சமீபத்தில் 2.5 கோடி ஸ்மார்ட்போன் கருவிகளை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ள இந்நிறுவனம் முதன்முறையாக பெங்களூரு நகரில் மீ ஹோம் ஸ்டோர் கிளையை திறந்த நிலையில், மும்பை, ஹைத்தராபாத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் சென்னை வடபழனியில் அமைந்துள்ள ஃபோரம் விஜயா மாலில் பிரத்தியேக மீ ஹோம் கடையை நேற்று திறந்துள்ளது.

சென்னையில் சியோமி Mi ஹோம் ஸ்டோர் திறப்பு

Mi ஹோம் ஸ்டோரில் வாடிக்கையாளர்களுக்கு சியோமி , MI ஸ்மார்ட்போன், பவர் பேங்க், ஹெட்போன்கள், ஏர் பியூரிஃபையர்கள் ஃபிட்னஸ் பேன்ட் போன்ற சாதனங்களை பயன்படுத்தி, வாங்க முடியும்.

இந்தியாவில் பெங்களூரு,மும்பை, ஹைத்தராபாத், சென்னை நகரங்களை தொடர்ந்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 100 Mi ஹோம் ஸ்டோர்களை துவங்க திட்டமிட்டுள்ளது.

Chennai mi store address ; 183, Arcot Road, NSK Salai, Vadapalani, Chennai, Tamil Nadu 600026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here