சியோமி மீ பிரவுசர் புரோ உட்பட மேலும் 15 சீன செயலிகளுக்கு தடை

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படுகின்ற சீன நாட்டின் செயலிகளை தொடர்ந்து ஒன்றிய அரசு முடக்கி வருகின்றது. முதற்கட்டமாக ஜூன் மாதத்தில் டிக் டாக், கேம்ஸ்கேனர், ஷேர்இட் உட்பட 59 செயலிகள் நீக்கப்பட்ட நிலையில், பிறகு மேலும் 47 செயலிகளை நீக்கியது. இந்நிலையில் கூடுதலாக 15 செயலிகளை தடை செய்யப்பட்டுள்ளது.

சியோமி மொபைல் தயாரிப்பாளரின் சியோமி மீ பிரவுசர் புரோ உட்பட சீன தேடுப்பொறி பைடு செர்ச் மற்றும் செர்ச் லைட், போட்டோ எடிட்டர், ஏர்புரூஸ், ஷாட் வீடியோ, மெய்பை, வீபோ மற்றும் பாக்ஸ் எக்ஸ்கேம் நீக்கப்பட்டுள்ளது. இதை தவிர இமெயில் சேவயை வழங்கும் நெட்இஸ், கேமிங் ஆப் ஹீரோ வார்ஸ் போன்றவைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

சியோமி உட்பட பைடு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாங்கள் இந்தியாவின் சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுவதாக தெரிவித்துள்ளன. பைட்டான்ஸ் நிறுவனம் தனது டிக் டாக் செயலியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர பல்வேறு முன்பே அரசிடம், உள்ளூர் விதிகளுக்கு ஏற்ப செயல்படுவதாக உறுதியளித்துள்ளது.