இந்தியா-சீனா இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் இந்திய சந்தையில் உள்ள 21 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு தனிநபர் பாதுகாப்பு தொடர்பான விபரங்களை மத்திய அரசு கோரியுள்ளது.

சீன மொபைல் நிறுவனங்கள்

டோக்லாம் எல்லையில் இந்தியா-சீனா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதனால், அதிகமான சீன மின்னணு பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதாலும் இந்த விசாரணையை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்தியாவின் மொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய பங்களிப்பினை பெற்று விளங்குகின்ற சீனாவை மையமாக கொண்டு செயல்படும் சியோமி, விவோ, ஓப்போ,ஜியோனி போன்ற பெரும்பாலான சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தவிர ஆப்பிள், பிளாக்பெர்ரி மற்றும் இந்திய மொபைல் போன் தயாரிப்பாளர்களிடமும் எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை செல்போனில் பயன்படுத்துகிறீர்கள், பயன்படுத்துவரின் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது போன்ற விபரங்கள் அடங்கிய கேள்விகளுக்கு என்பது குறித்து மத்திய அரசு விவரங்களைக் கேட்டுள்ளது.

கடந்த 2016-2017 ஆம் ஆண்டில் மட்டும் $3.7 பில்லியன் மதிப்பீட்டில் சீன மொபைல் போன் சாரந்த தயாரிப்புகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 28ந் தேதிக்குள் பதில் அளிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது, இந்த விபரத்தில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பத்தில் குளறுபடிகள் இருக்கும் பட்சத்தில், அந்த நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 5 கோடி வரை அபராதம் மற்றும் நிறுவனத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்னதான் விலை குறைவு, அதிக வசதி என்றாலும், இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்காமல் இருப்பது என்றைக்குமே நல்லது தான்.. இதுபற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க..!