mi a3

சீனாவின் சியோமி மொபைல் தயாரிப்பாளர், தங்களது பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் மற்றும் இணைய உலாவல் என அனைத்தையும் சீன சர்வருக்கு அனுப்பியதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சைபர் ஆராய்ச்சியாளர் காபி சிர்லிக் (Gabi Cirlig) தனது ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் தொலைபேசியில் அவர் செய்யும் எல்லாவற்றையும் கண்காணித்து வருவதனை கண்டறிந்தள்ளார்.  இந்த மொபைல் மட்டுமல்லாமல் சியோமியின் அனைத்து மொபைல்களில் வழங்கப்படுகின்ற இந்நிறுவன சியோமி பிரவுசர் மூலமாக பயன்படுத்தும் அனைத்து இணைய உலாவல், தேடும் செய்திகள் என அனைத்தையும் பதிவு செய்து தரவுகளாக நியூஸ் ஃபீட் சியோமி மென்பொருள் மூலமாக சீனாவின் அலிபாபா நிறுவனத்தால் ஹோஸ்டிங் செய்யப்பட்டுள்ள ஒரு ரிமோட் சர்வருக்கு அனுப்புவதாக தெரிய வந்துள்ளது. கூடுதலாக அவர் கூறுவது என்னவென்றால் பிரத்தியேமாக incognito மோடில் பயன்படுத்தினாலும் கூட அவற்றையும் பதிவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்த கோப்புகளை பயன்படுத்துகிறோம் என அனைத்தும் எந்தத் திரைகளுக்கு அவர் ஸ்வைப் செய்கிறோம் போன்றவற்றுடன் அவற்றில் ஸ்டேட்ஸ் மற்றும் செட்டிங்ஸ் பக்கம் ஆகியவையும் அடங்கும். தரவு அனைத்தும் தொகுக்கப்பட்டு சிங்கப்பூர் மற்றும் ரஷ்யாவில் உள்ள ரிமோட் சர்வருக்கு அனுப்பப்படுவதாக கறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்த வலைதளங்கள் அனைத்தும் சீனாவின் பெய்ஜிங்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மேலும் விரிவாக ஆய்வினை மேற்கொள்ள ஃபோர்பஸ் பத்திரிக்கை மற்றொரு சைபர் பாதுகாப்பு ஆய்வாளரை ஆண்ட்ரூ டைர்னி (Andrew Tierney)
கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மேலும் கூடுதலாக மேற்கொண்டார். அவர் ஆய்வில் சியோமி பிரவுசர், மீ பிரவுசர், மின்ட் பிரவுசர் என மூன்றுமே தரவுகளை திருடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சியோமி வெளியிட்ட அறிக்கையில் நாங்கள் எந்த தரவுகளையும் நாங்கள் சீன சர்வருக்கு எடுத்துச் செல்லவில்லை என குறிப்பிடும் விதமாக “ இந்த ஆராய்ச்சி பொய்யானவை” மற்றும் “தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றோம்” என்றும், “ பயனர் தரவு தனியுரிமை விஷயங்களில் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுடன் முழுமையாக இணங்குகின்றோம்” என குறிப்பிட்டுள்ளது.

ஆனால் மற்றொரு சியோமி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், உலாவல் தரவை சேகரிப்பதை உறுதிப்படுத்தியள்ளார். தகவல் அனானி (Anonymous) முறையிலே எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஆனால் எந்த அடையாளத்துடனும் இணைக்கப்படவில்லை என குறிப்பிட்டள்ளார். மேலும் இது பயனாளர்களின் சம்மதத்துடனே பின்பற்றப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

source