ஜியோனி மொபைல் நிறுவனம் திவாலானது

சீனாவினை தலைமையிடமாக கொண்டு 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜியோனி மொபைல் நிறுவனம் திவாலானதாக ஷென்சென் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்துக்கு சுமார் 20.2 பில்லியன் யுவான் கடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

இந்நிறுவனத்தின் நிறுவனரான லியு லிரோங் சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்த காரணத்தினால் சுமார் 10 பில்லியன் யுவானை ( ஆயிரம் கோடி) இழந்துவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றது  இந்நிறுவனம் சப்ளையர்களுக்கு தர வேண்டிய பாக்கி தொகை கொடுக்காமல் அப்படியே நின்று போய்விட்டது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கேட்டு ஜியோனி நிறுவனத்தை முறையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜியோனி நிறுவனம், திவாலாகி விட்டதாக அறிவிக்குமாறும் ஷென்சென் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த பிறகு நீதிமன்றம் ஜியோனி நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவர் லியு லிரோங் கூறியதாவது:-

சூதாட்டத்தில் பணத்தை இழத்தது உண்மைதான். ஆனால், சூதாட்டத்திற்கு என செலவிட்ட பணம் நிறுவனத்துடைய பணம் அல்ல, 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 290 கோடி டாலர்கள் வரை 648 சப்பளையர்களுக்கு நிலுவைத் தொகையாக வழங்க வேண்டி இருந்தது. இந்நிறுவனத்திற்கு கடந்த 2013 முதல் 2015க்குள் மட்டும் சுமார் 1.44 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் இந்த இழப்பு இருமடங்காக அதிகரித்து காராணத்தால் மட்டும் திவாலாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜியோனி நிறுவனம், இந்தியாவில் ரூ.650 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் திவலாகி உள்ளதால் முதலீடு செய்யும் வாய்ப்பில்லை என உறுதியாகியுள்ளது.