இந்தியர்களின் அடையாளமாக மாறிவரும் ஆதார் தொடர்பான தகவல்களை அமெரிக்கா சி.ஐ.ஏ உளவு பார்த்திருப்பதாக பிரசத்தி பெற்ற விக்கீலிக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆதார் தகவல்கள் உளவு
அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக கருதப்படுகின்ற ஆதார் தொடர்பான தகவல்களை உளவு பார்த்திருப்பதாக பிரசத்தி பெற்ற விக்கிலீக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
சாதாரண மனிதனின் அடையாளம் என அறியப்படுகின்ற ஆதார் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகள் பெறுவதற்கு வழிவகுக்கும் இந்த முறை முந்தைய அனைத்து அடையாள அட்டைகளுடன் ஆதாரை இணைப்பது கட்டயாம் என அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அமெரிக்கா ஏகாபத்தியத்தின் பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது உளவு தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வரும் நிலையில் இந்தியாவின் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI) சேகரித்து வருகின்ற ஆதார் அட்டைக்காக பயோமெட்ரிக் தகவல்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. அமைப்பு அனுகியிருக்க வாய்ப்புள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் ஆதார் தொடர்பான பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க அதாவது கைரேகை மற்றும் கண் கருவிழி போன்றவற்றை பதிவு செய்யும் கருவிகளுக்கு இந்தியாவில் முதல்முறையாக அனுமதிக்கப்பட்ட கிராஸ் மேட்ச் டெக்னாலஜிஸ்’ (Cross Match Technologies) நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனமாகும்.
எனவே ,இந்நிறுவனத்தின் வாயிலாக ஆதார் தொடர்பான தகவல்களை சி.ஐ.ஏ உளவு பார்த்திருக்கலாம் என விக்கிலீக்ஸ் கருதுகின்றது.
Have CIA spies already stolen #India's national ID card database? #aadhaar #biometric https://t.co/zqJmkaoiw8 #modi
— WikiLeaks (@wikileaks) August 25, 2017
ஆனால், இந்தத் தகவல்களை தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரிகள் மறுத்துள்ளனர். ‘ பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிப்புக்காக மட்டுமே அந்த நிறுவனத்திடம் இருந்து கருவிகள் மட்டுமே வாங்கப்பட்டு வருகிறது. அந்தக் கருவிகள் மூலம் சேகரிக்கப்படும் பயோமெட்ரிக் தகவல்கள் ஆதார் சர்வர்களில் மட்டுமே சேமிக்கப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.