ஸ்மார்ட்போன்களின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரிப்பதனை போல அதற்கான ஆபத்துகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.தற்போது கலர்பிளாக் என்ற கேம் மிக மோசமான ட்ரோஜான் வைரஸ் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கலர்பிளாக் கேம்

உலகில் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற திறந்தவெளி மென்பொருளான  ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பல்வேறு மால்வேர்கள் மற்றும் ட்ரோஜான்கள் மிக எளிதாக ஆக்கரமித்து விடுகின்றன. சமீபத்தில் கேஸ்பர்ஸ்கை லேப்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூகுள் பிளே ஸ்டோர் வாயிலாக கிடைக்கின்ற கேம் கலர்பிளாக் (Colourblock) செயலில் ட்ரோஜான்கள் உள்ளதாக கண்டறிந்துள்ளது.

Colourblock என்ற ஆப் ஆண்ட்ராய்டு மொபைல்களை மிக இலகுவாக ரூட்டிங் செய்து மால்வேர்கள் மற்றும் ட்ராஜன்களை நிறுவி தேவையற்ற விளம்பரங்களை காண்பிக்க தொடங்கி விடுகின்றது.

தற்போது இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்த நீக்கப்பட்டாலும் எந்தவொரு செயலியை நிறுவுவதற்கு முன்பாக அந்த செயலி பற்றிய முழுவிபரங்களை ஆராய்ந்த பின்னர் நம்பகமான செயலி என உறுதி செய்த பின்னரே இன்ஸ்டால்செய்ய வேண்டும் என கூகுள் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.