வரும் 30ம் தேதி அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபேடுகள், மேக் கம்ப்யூட்டர்கள்

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபேடுகள், மேக் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை வரும் 30ம் தேதி நடக்கும் விழாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் நிறுவனம் இந்த அறிமுகம் குறித்த இரண்டு வகையான இன்விடேஷன் அனுப்பியுள்ளது. ஒரு இன்விடேஷனில் பொதுமக்கள், கட்டிடங்கள் மற்றும் மற்ற பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இது ஆப்பிள் பொருட்களை வாங்கும் மக்களாக இருக்கும் என்றும் இந்த படம் பென்சில் ஓவியமாக உள்ளது. மற்றொரு இன்விடேஷனில் பிளாக் அண்ட் ஒயிட் கலரில் தண்ணீர் துளிகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய ஐபேடுகள் வாட்டர் ரெசிஸ்டேன்ஸ் கொண்டதாக இருக்கும் என்பதை இருக்கும் என்பதை காட்டுகிறது.

வரும் 30ம் தேதி அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபேடுகள், மேக் கம்ப்யூட்டர்கள்

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, புதிய ஐபேடு போர்ஸ்கள் பெரியளவிலான டிஸ்பிளேகள் மற்றும் “டச் ஐடி” களுடன் பிங்கர் பிரிண்ட் சென்சிங் ஹோம் பட்டனை கொண்டிருக்கும். மேலும் ஆப்பிள் பேஸ் ஐடி தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும்.

டேப்லெட்கள், USB-C கனெக்டிவிட்டி கொண்டதாகவும், ஆப்பிள் பென்சில் ஸ்டைலஸ் கொண்டதாகும் இதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் தனது அவுட்டேட்டட் மேக்புக் ஏர் வகைகளை மறு வடிவமைப்பு செய்து $999 விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஐபோன் XS, XS MAX மற்றும் XR போன்களை கலிபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆப்பிள் வாட்ச்கள் சிலிம்மாக மாற்றம் செய்துள்ளது.