தைவானில் நடந்த கம்ப்யூடெக்ஸ் 2018ல் அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு ஆகியுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று லேப்டாப்களில், ஜென்புக் புரோ 14 (UX580) லேப்டாப்கள் 1,79,990 ரூபாயில் இருந்தும், ஜென்புக் எஸ் (UX391) லேப்டாப்கள் 1,29,990 ரூபாய் இருந்தும், ஜென்புக் 13 (UX331) லேப்டாப்கள் 66,990 ரூபாயிலும் கிடைகிறது என்று ஆசுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜென்புக் புரோ 15 (UX580) விரைவாகவும், விண்டோஸ் 10 இயக்கும் வகையிலும், ஜென்புக் எஸ் (UX391) அதிக ஆற்றலுடன், லேசாக மற்றும் எளிதில் எடுத்து செல்லக்கூடிய பிரேம் உடனும் கிடைக்கிறது. ஜென்புக் 13(UX331) லேப்டாப்கள் காம்பேக்ட் ஆகவும், எளிதாக எடுத்து செல்லும் வகையிலும் இருக்கும். ஜென்புக் புரோ சீரிஸ் (UX580) புரோப்ப்சன்ல் கிரேடு லேப்டாப்கள் இதில் நானோஎட்ஜ் 4கே டச் டிஸ்பிளே உடன், ஸ்கிரின் பெற டெக்னாலஜியும் உள்ளது. இதில் உள்ள ஸ்க்ரீன் பேட் உயர்ந்த ரெசல்யூசன், முழு கலருடனும் ஆக்சலரி டச்ஸ்கிரின், டச் பேடு உடனும் கிடைக்கிறது.

இந்த லேப்டாப்கள் முழு ஹெச்டி நானோஎட்ஜ் டிஸ்பிளே, 8வது ஜென் இன்டல் கோர் CPUகள், 512 ஜிபி PCIe SSD மற்றும் 13.5 மணிநேர பேட்டரி லைப் ஆகியவற்றை கொண்டுள்ளது. 13.9mm ஜென்புக் 13(UX331) லேப்டாப்கள் முழு ஹெச்டி நானோஎட்ஜ் ஸ்லிம் டிஸ்பிளே, 8வது ஜென் இன்டல் கோர் CPUகள், 512 ஜிபி SSD மற்றும் 16சிபி ரேம் ஆகியவற்றை கொண்டுள்ளது.