ஹெச்பி 260 ஜி 3 டெஸ்க்டாப் மினி இந்தியாவில் அறிமுகமானது;  விலை ரூ. 19.990

ஹெச்பி இந்தியா நிறுவனம், மலிவு விலையில் மாணவர்களுக்கு உதவும் டெஸ்க்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 19 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த ஹெச்பி 260 ஜி 3 டெஸ்க்டாப் மினிகளை இந்தியாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வாங்கி, அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணித லேப் போன்றவற்றை மலிவு விலையில் மேம்படுத்தி கொள்ளலாம் என்று ஹெச்பி இந்தியா நிறுவனம், தெரிவித்தள்ளது.

ஹெச்பி 260 ஜி 3 டெஸ்க்டாப் மினி இந்தியாவில் அறிமுகமானது;  விலை ரூ. 19.990

இது குறித்து பேசிய ஹெச்பி இந்தியா நிறுவனம் உயர் அதிகாரி சுமீர் சந்திரா, தொழில்நுட்பங்கள் பிசினஸ் மற்றும் வாடிக்கையாளர்களின் வாழ்கையில் முக்கியமாக மாறியுள்ளது. மாணவர்களும் தங்கள் எதிர்கால தேவைக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்காக ஹெச்பி இண்டகிரேட்டாட் ஒர்க் சென்டர் மற்றும் ஹெச்பி எலைட் டிஸ்பிளே ஆகியவற்றை பயன்படுத்தி ஆசிரியர்கள் எளிதாக பைல்களை படிக்க முடியும் என்றார்.

பெண்டியம் டூயல் கோர்களுடன் 18.5 இன்ச் மானிட்டர் கொண்ட ஹெச்பி 260 ஜி 3 டெஸ்க்டாப் மினி 19 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் கிடைகிறது. 7வது ஜென் இன்டல்கோர் i3-களுடன் கூடிய 18.5 இன்ச் மானிட்டர் கொண்ட வகைகள் 25 ஆயிரத்து 990 ரூபாய் விளியில் கிடைகிறது. இந்த டெஸ்க்டாப்கள் விண்டோஸ் 10 புரேஆப்பரேடிங் சிஸ்டமில் இயங்கும்.