இந்தியாவில் அறிமுகமானது 480 GB வரை ஸ்டோரேஜ் கொண்ட  ஐபால் பேந்தம் SSD களுடன் கூடிய 3D NAND பிளாஸ் டெக்

ஐபால் நிறுவனம், வளர்ந்து வரும் SSD மார்க்கெட் நுழைந்து, தனது முதல் அதிவேக SSD ஐ அறிமுகம் செய்துள்ளது. பேண்தம் என்று அழைக்கப்படும் இந்த அதிவேக SSD-கள் 2.5 இன்ச் அளவில், 120GB, 240GB மற்றும் 480GB ஸ்டோரேஜ் ஆப்சன்களுடன், 3D NAND பிளாஸ் மற்றும் டர்போ-பூஸ்ட் SLC கேட்ச் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த SSD-கள் 10 மடங்கு வேகமாக பூட்-அப் டைம், ஷாட்டவுண் மற்றும் டிரான்ஸ்பர் டைம்களை கொண்டிருக்கும். மேலும் இதில் TRIM கமாண்ட், எரர் கரேக்சன் கோட், RAID மற்றும் SMART மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகளும் உள்ளன. இந்த SSD-களின் துவக்க விலையாக 5,425 ரூபாய் என்றும், இந்த SSD-களுக்கு மூன்று ஆண்டு வாரண்ட்டி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது 480 GB வரை ஸ்டோரேஜ் கொண்ட  ஐபால் பேந்தம் SSD களுடன் கூடிய 3D NAND பிளாஸ் டெக்

120GB ஸ்டோரேஜ் கொண்ட ஐபால் பேந்தம் SSD-கள் 5,425 ரூபாய் விலையிலும், 240GB ஸ்டோரேஜ் கொண்ட ஐபால் பேந்தம் SSD-கள் 8,425 ரூபாய் விலையிலும் மற்றும் 480GB ஸ்டோரேஜ் கொண்டவை 17,425 ரூபாய் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. மேற்குறிய மூன்று SSD-களையும் நாட்டில் உள்ள பெரிய ரீடெயில் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கி கொள்ளலாம் என்று ஐபால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி மற்ற வசதிகளாக, ஐபால் பேந்தம் SSD-களில் புதிய தலைமுறை 3D NAND பிளாஷ் மற்றும் டர்போ-பூஸ்ட் SLC கேட்ச் தொழில்நுட்பமும் இடம் பெற்றுள்ளது. இந்த SSD-கள் 500MBps வேகத்தில் இயங்கும். மேலும் 120GB வெர்சன் ஐபால் பேந்தம் SSD-கள் 430MBps ரைட் ஸ்பீடையும், 240GB மற்றும் 480GB வெர்சன் ஐபால் பேந்தம் SSD-கள் 500MBps ரைட் ஸ்பீடையும் கொண்டதாக இருக்கும்.

இந்தியாவில் அறிமுகமானது 480 GB வரை ஸ்டோரேஜ் கொண்ட  ஐபால் பேந்தம் SSD களுடன் கூடிய 3D NAND பிளாஸ் டெக்

மற்ற ஹார்ட் டிரைவ்களுடன் ஒப்பிடும் போது இந்த SSD-கள் குறைந்த அளவு பூட்-அப் டைம் கொண்டதாக இருக்கும், மேலும் இவை ஷாக் புரூப் மற்றும் வைப்ப்ரேசன் புரூப் கொண்டதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த SSD-கள் டிஸ்க்டாப் மற்றும் நோட்புக்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று ஐபால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபால் பேந்தம் SSD-கள் SATA II 6Gbps இன்டர்பேஸ் கொண்டது. இதுமட்டுமின்றி இந்த டிரைவ் 77 கிராம் எடையுடன், 100x7x70mm அளவில் இருக்கும்.