பேஸ் ஐடி, யூஎஸ்பி டைப் c வசதிகளுடன் அறிமுகமானது ஐபேடு புரோ 2018 மாடல்கள்

அமெரிகாவில் சமீபத்தில் நடந்த விழாவில் ஆப்பிள் நிறுவனம், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஐபேடு புரோ-வை அறிமுகம் செய்தது. புதிய ஐபேடு புரோ டேப்லேட்கள், 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இரண்டு அளவுகளை பேஸ் ஐடி, யூஎஸ்பி டைப் c வசதிகளுடன் அறிமுகமானது. மேலும் இதில் ஆப்பிள் A12X போனிக் சிப் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட்களுடன் 7-கோர் ஆப்பிள் கிராப்பிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது.

யூஎஸ்பி டைப் c வசதிகளுடன் அறிமுகமான முதல் ஐஒஎஸ் டிவைஸ் என்ற போதும், இதில் ஹெட்போன் ஜாக் இடம் பெறவில்லை. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகமானது முதல் இதுவரை அப்டேட் பெறமால் இருந்த ஆப்பிள் பென்சில்கள் தற்போது அப்டேட் பெற்றுள்ளன. புதிய ஐபேடு புரோ டேப்கள் புதிய டிசைன்களுடன், வயர்லெஸ் சார்ஜிங், மேக்னடிக் சப்போர்ட் போன்றவைகளையும் பெற்றுள்ளது.

பேஸ் ஐடி, யூஎஸ்பி டைப் c வசதிகளுடன் அறிமுகமானது ஐபேடு புரோ 2018 மாடல்கள்

புதிய ஐபேடு புரோ டேப்லேட்கள், 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் டேப்களும் முறையே 64GB, 256GB, 512GB மற்றும் 1TB ஸ்டோரேஜ்களில் கிடைக்கிறது. 11 இன்ச் மாடல்கள் தோராயமாக 58,800 ரூபாய் விலையிலும், 12.9 இன்ச் மாடல்கள் 73,500 ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் 11-இன்ச் ஐபேடு புரோ டேப்லேட்கள், 71,900 ரூபாய் விலையிலும், இதை விட பெரிய மாடல் 89,900 ரூபாய் விலையிலும் கிடைக்கும். இந்த டேப்லேட்கள் வரும் நவம்பர் 7ம் தேதி முதல் கிடைக்கும்.

400 மில்லியன் ஐபேடு யூனிட்கள் இதுவரை விற்பனையாகியுள்ளது என்றும் இதன் மூலம் உலகளவில் அதிகம் விற்பனையாகும் டேப்லெட்களாக உள்ளது என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.