ரூ. 86, 999 விலை மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக்2 மற்றும் சர்பேஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்

ரூ. 86, 999 விலை மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக்2 மற்றும் சர்பேஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப்கள் அனைத்தும், வை-பை 802.11a/b/g/n/ac மற்றும் ப்ளூடூத் 4.0 LE உடன் வெளிவர உள்ளது.

விலையை பொருத்தவரையில், இன்டெல் கோர் i5, 128 ஜிபி எஸ்எஸ்டி, 8 ஜிபி ராம், இன்டெல் ஹெச்டி கிராப்பிக்ஸ் 620 வகைகள் 86.999 ரூபாய் விலையிலும், இன்டெல் கோர் i5, 256 ஜிபி எஸ்எஸ்டி, 8 ஜிபி ராம், இன்டெல் ஹெச்டி கிராப்பிக்ஸ் 620 வகைகள் 1,14,999 ரூபாய் விலையிலும், இன்டெல் கோர் i7, 256 ஜிபி எஸ்எஸ்டி, 8 ஜிபி ராம், இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராப்பிக்ஸ் 640 வகைகள் 1,14,999 ரூபாய் விலையிலும், இன்டெல் கோர் i7, 512 ஜிபி எஸ்எஸ்டி,168 ஜிபி ராம், இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராப்பிக்ஸ் 640 வகைகள் 1,96,999 ரூபாய் விலையிலும், இன்டெல் கோர் i7, 1 TB எஸ்எஸ்டி,16 ஜிபி ராம், இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராப்பிக்ஸ் 640 வகைகள் 2,33,999 ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரூ. 86, 999 விலை மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக்2 மற்றும் சர்பேஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 2- கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நவீன இன்டெல் டுயல்-கோர் அலல்து குவாட்-கோர் பிரஸஸர்கள், கிராப்பிக்களுக்காக நவிதியா GeForce மற்றும் 17 மணி நேர பேட்டரி லைப்புடனும் வெளியாக உள்ளது. இந்தியாவில் இந்த லேப்டாப்கள், 13.5 இன்ச் மற்றும் 15 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.

சர்பேஸ் புக் 2 வகைகளின் கிராப்பிக்ஸ் செயல்திறன் ஒரிஜினல் சர்பேஸ் புக் செயல்திறனை ஒப்பிடும் போது ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை பயன்படுத்துபவர்கள் கலப்பு யார்த்தத்துடனோ அல்லது ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் அல்லது அதிரடி விளையாட்டுகள் விளையாடவோ செய்யலாம். டிஸைனர்கள், டெவலப்பர்கள், ஓவியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை குறிவைத்தே இந்த ஹைபிரிட் லேப்டாப்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.