சீனாவில் அறிமுகமானது மைக்ரோ சாப்ட் சர்பேஸ் லேப்டாப் 2; விலை $999

மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய சர்பேஸ் 2 லேப்டாப்களை சீனா மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. $999 விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த லேப்டாப்கள் ப்ளுஷ் நிறத்திலும் 8வது தலைமுறை இன்டல் பிராசசர்களுடனும் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் நிறுவனம், பிளாக் பினிஷ் களுடன் கூடிய சர்பேஸ் 2 லேப்டாப்களை கடந்த அக்டோபர் 2ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த விழாவில், சர்வதேச அளவில் அறிமுகம் செய்தது

சீனாவில் அறிமுகமானது மைக்ரோ சாப்ட் சர்பேஸ் லேப்டாப் 2; விலை $999

சீனாவில் இந்த லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன உயர்அதிகாரி பானோஸ் பனே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சீனாவில் எங்கள் புதிய தயாரிப்பை வெளியித்டுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். சீனாவுக்காகவே பிரத்தியேகமாக இந்த லேப்டாப்கள் ப்ளுஷ் நிறத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்பேஸ் லேப்டாப் 2 வகை லேப்டாப்கள் பிரிமியம் டிசைன், பிக்சல்சென்ஸ் டச் டிஸ்பிளே மற்றும் சிறந்த கீபோர்டு மற்றும் டிராக்பேடுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப்களின் பேட்டரி லைப்கள் 14.5 மணி நேரமாக இருக்கும்.

சீனாவில் அறிமுகமானது மைக்ரோ சாப்ட் சர்பேஸ் லேப்டாப் 2; விலை $999

சர்பேஸ் லேப்டாப்களில் தொடர்ச்சியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், நியூயார்க்கில் நடந்த விழாவில் தனது புதிய நான்கு தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது சர்பேஸ் புரோ 6, சர்பேஸ் ஸ்டுடியோ 2, சர்பேஸ் லேப்டாப் 2 மற்றும் முதல் முறையாக ஹெட்போன்கள் இவற்றுடன் புதிய விண்டோஸ் மற்றும் ஆபிஸ் 365 பதிப்புகளையும் வெளியிட்டது.