மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் பொருட்களில் முதல் முறையாக இடம் பெற்ற ஹெட்போன்கள்

சர்பேஸ் லேப்டாப்களை வெளியிட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய தயாரிப்பான சர்பேஸ் புரோ 6, சர்பேஸ் ஸ்டுடியோ 2 மற்றும் சர்பேஸ் லேப்டாப் 2 மற்றும் முதல்முறையாக சர்பேஸ் ஹெட்போன்களையும் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. நியூயார்க்கில் நடந்த விழாவில், விண்டாஸ் அப்டேட் வரும் 10ம் தேதி பயனாளர்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

சர்பேஸ் புரோ 6 லேப்டாப்கள் 899 டாலர் விலையிலும், சர்பேஸ் லேப்டாப் 2 வகைகள் 999 டாலர் விலையிலும் விற்பனைக்கு வர உள்ளது. இந்த லேப்டாப்கலை வாங்க விரும்புபவர்களுக்கான பிரி ஆர்டர்கள் அமெரிக்காவில் வரும் 16ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

சர்பேஸ் ஹெட்போன்கள் 349 ல்டார் விலையிலும், சர்பேஸ் ஸ்டுடியோ 2 வகைகள் 3,4999 டாலர் விலையிலும் விற்பனைக்கு வர உள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் பொருட்களில் முதல் முறையாக இடம் பெற்ற ஹெட்போன்கள்

சர்பேஸ் ஹெட்போன்களில் 13 லெவல் நாய்ஸ் கண்ட்ரோல் லெவல் கொண்டுள்ளது. இதில் உள்ள மைக்ரோபோன்களை கவர் செய்யும் வகையில் இரண்டு பிம்கள், இயர் கப்களில் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இதில் 8 மைக்ரோபோன்கள் உள்ளன. இதன் மூலம் இதை பயன்படுத்துபவர்கள் தேவையான சத்தங்களை தெளிவாக கேட்க முடியும்.

இதுகுறித்து மைக்ரோ சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஹெட்போனை பயன்படுத்தும் போது, நீங்கள் எளிதாக சத்தத்தின் அளவு மற்றும் நாய்ஸ்களின் லெவல்களை, இயர்போன் டயல் மூலமாகவே கட்டுப்படுத்தி கொள்ள முடியும். இந்த ஹெட்போன்கள் சர்பேஸ் லேப்டாப்களுக்கு சபோர்ட் ஆகும் வகையில் இருக்கும். இவற்றை சர்பேஸ் லேப்டாப்களுடன் எளிதாக இணக்க, இந்த ஹெட்போனில் ப்ளூடூத் என்ஏபில் செய்யப்பட்டுள்ளது.

சர்பேஸ் புரோ 6 லேப்டாப்கள், நவீன எட்டாவது தலைமுறை இன்டல் குவாட் கோர் பிராசசர்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்கள், ஐந்தாம் தலைமுறை லேப்டாப்கலை விட 67 சதவிகிதம் வேகமாக செயல்படும் மேலும் இந்த லேப்டாப்களில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பேக் பொருத்தப்பட்டுள்ளதால், அதிக ஆற்றலுடன் இருக்கும். ஆனாலும், இந்த லேப்டாப்கள் பெயர்வுத்திறன், பல்துறை மற்றும் ஒரு நாள் முழுவதும் நிலைத்திருக்கும் பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கும்.

சர்பேஸ் புரோ 6 லேப்டாப்களில் பிக்சல்சென்ஸ் டச் டிஸ்பிளே வசதிகை கொண்டுள்ளது. இது விண்டோசில் உள்ள ஆபிஸ் 365 மற்றும் பல்வேறு வசதிகளை எளிதாக செய்து கொள்ள உதவும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் பொருட்களில் முதல் முறையாக இடம் பெற்ற ஹெட்போன்கள்

சர்பேஸ் ஸ்டுடியோ 2 லேப்டாப்கள், கிரியேட்டர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இதில் கிரியேட்டர்களுக்கு தேவையான அதிர்வு, உயர்-கிராபிக்ஸ் செயல்திறன் மற்றும் வேகமாக செயலாக்கம், அடுத்த தலைமுறை பாஸ்கல் கிராபிக்ஸ் மற்றும் 50 சதவீதம் வேகமாக GPU பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சர்பேஸ் ல்டுடியோ லேப்டாப்கள் 38 சதவிகிதம் பிரைட்ஆகவும், 22 சதவிகிதம் காண்டிராஸ்ட் ஆகவும் இருக்கும்.

சர்பேஸ் லேப்டாப்களுடன் ஒப்பிடும் போது சர்பேஸ் 2 வகைகள் 85 சதவிகிதம் வேகமாக இருக்கும். ஏன்என்றால் இந்த லேப்டாப்கள் புதிய குவாட் கோர், 8th ஜெனரேசன் பிராசசர்களை கொண்டுள்ளது. இந்த லேப்டாப்கள், பிரிமியன் டிசைன், பிக்சல் சென்ஸ், டச் டிஸ்பிளே, சிறந்த கிபோர்ட்டு மற்றும் டிராக்பேடுகளை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி 14.5 மணி நேர பேட்டரி லைப்களையும் கொண்டுள்ளது.

Comments are closed.