ரூ. 57,900 ரூபாயில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி Tab S4

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி டேப் S4-களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஆண்டிராய்டு டேப்லேட்கள் சாம்சங் டெக்ஸ் மற்றும் எஸ் பென்களுடன் 57 ஆயிரத்து 900 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

கேலக்ஸி டேப் S4-கள் ஸ்போர்ட்ஸ் பேசலேகளுடன் 10.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் சூப்பர் AMOLED தொழில்நுட்பங்களுடன் 16:10 அங்குல ஸ்கிரீன்களுடன் வெளியாகியுள்ளது.

இந்த டேப்கள் 7,300mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் நான்கு ஸ்பீக்கர்களுடன் AKG மற்றும் டால்பி அட்டோம் இம்பிரசிவ் சவுண்ட் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

ரூ. 57,900 ரூபாயில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி Tab S4

சாம்சங் டெக்ஸ் மற்றும் எஸ் பென் ஆகியவற்றுடன் வெளிவந்துள்ள இந்த கேலக்ஸி டேப் S4, தேவைகேற்ப வடிவமைக்கப்பட்ட போதும், கம்ப்யூட்டர் போன்று இருக்காது என்று சாம்சங் இந்தியா நிறுவன் ஜெனரல் மேனேஜர் ஆதித்யா பாபர் தெரிவித்துள்ளார்.

சாம்சங் டெக்ஸ், பயனாளர்களுக்கு கம்ப்யூட்டரில் பணியாற்றும் அனுவபத்தை கொடுக்கும். அதற்கு ஏற்றார் போல பெரிய ஸ்கிரீன், முழு அளவிலான கீபோர்ட் மற்றும் மவுஸ்களை கொண்டிருக்கும்.

ஸ்டான்ட்அலோன் மோடில், நீங்கள் ஒரு கம்ப்யூட்டரில் பணியாற்றுவதை போன்ற உணர்வை அளிக்கும். இதில் உள்ள கீபோர்ட் புத்தக கவர் போன்றே இருக்கும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டூயல் மோடில், பயனாளர்கள் தங்கள் டேப்லெட்டை பெரிய ஸ்க்ரீன் கொண்ட மானிடருடன் HDMI அடப்டர் வழியாக இணைத்து கொள்ள முடியும்.

ரூ. 57,900 ரூபாயில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி Tab S4

இதில் உள்ள எஸ் பென்-கள் சிறந்த எழுதும் அனுபவத்தை கொடுக்கும். இதன் மூலம் டிராயிங், நோட்ஸ்கள் எழுதுவது மற்றும் மெசேஜ் செய்ய முடியும்.

இந்த கேல்ஸி டேப் S4 நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. பிளாக் மற்றும் கிரே கலரில் நாளை முதல் அமேசானில் விற்பணைக்கு வர உள்ளது.

இந்த டேப்-ஐ வாங்குபவர்களுக்கு சாம்சங் நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டுகளுக்கு அறிமுக சலுகையாக 5,000 ரூபாய் கேஷ் பேக் அளிக்கப்பட உள்ளது.

மேலும், கேல்ஸி டேப் S4 வாடிக்கையாளர்களுக்கு ஜியோ 4G கனெக்சன் பெற்றிருந்தால், நீங்கள் 198 அல்லது 299-க்கு ரீசார்ஜ் செய்தால், 2,750 ரூபாய் கேஷ் பேக் கிடக்கும்.