ஆறே மாதத்தில் அரை மில்லியனை தொட்டது Mi TV விற்பனை: சியோமி

இந்தியாவில் Mi TV யூனிட்கள் விற்பனை தொடங்கபட்டு ஆறு மாதங்களில் அரை மில்லியன் யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

சியோமி நிறுவனம் மூன்று டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் இரண்டு TV 4A சீரிஸ் மற்றும் Mi TV 4 ஆகியவைகளும் அடங்கும். இந்த டிவிக்கள் விற்பனைக்காக ப்ளிக்கார்ட்,. Mi.com மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் கடந்த மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் விற்பனைக்கு வந்தது.

ஆறே மாதத்தில் அரை மில்லியனை தொட்டது Mi TV விற்பனை: சியோமி

இந்நிலையில், Mi TV 4 வகை 55-இன்ச், Mi TV 4A வகை 32-இன்ச் மற்றும் Mi TV 4A வகை 43இன்ச் என மொத்தமாக 5,00,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இது சியோமி நிறுவனம் இண்டஸ்ட்ரீயில் முதல் முறை என்பதும், இந்தியாவில் படைக்கப்பட்ட புதிய மைல்கலாகும் என்று சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 55இன்ச் Mi TV 4-கள் 44,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதில் ஸ்போர்ட்ஸ் 55 இன்ச் அல்ட்ரா-HD டிஸ்பிளே பேனல்-ஐ கொண்டுள்ளது. இது HDR-க்கு சபோர்ட் செய்யும் என்பதுடன் மொத்தமாக 4.9mm தடிமன் கொண்டுள்ளது. இந்த டிவி, 64 பிட், குவாட்-கோர் அம்லாஜிக் கோர்டேக்ஸ் -A53 SoC, இத்துடன் மாலி-T830 GPU மற்றும் 2GB ரேம் கொண்டது. மேலும் இதில் 8GB ஆன்-போர்டு ஸ்டோராஜ் மற்றும் டால்பி +DTS சினிமா ஆடியோவுடன், 8W டக்ட் இன்வேர்ட் ஸ்பீக்கர்களும் உள்ளது. இந்த டிவி, ஆண்டிராய்டு பேச்வால் UI உடன் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்களுடன் தனிப்பட்ட பரிந்துரை மற்றும் உலகளாவிய தேடல் போன்றவைகளை கொண்டது.

ஆறே மாதத்தில் அரை மில்லியனை தொட்டது Mi TV விற்பனை: சியோமி

இந்நிலையில், Mi TV 4A 43-இன்ச் வகைகள் இந்தியாவில் 22 ஆயிரத்து 999 ரூபாய் விலையிலும், Mi TV 4A 32 இன்ச் வகைகள் 13 ஆயிரத்து 999 ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவைகள் அம்லாஜிக் குவாட்-கோர் SoC, இத்துடன் 1GB ரேம் கொண்டது. மேலும் இதில் 8GB ஆன்-போர்டு ஸ்டோராஜ் கொண்டது. 43-இன்ச் Mi TV 4A ஸ்போர்ட்ஸ் முழு HD ( 1920x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே, 32 இன்ச் மாடல் HD(1366×768 பிக்சல்கள்) டிஸ்பிளே உடன் விற்பனையாகிறது.